Tuesday, March 14, 2023

கிராமங்களின் வளர்ச்சிப்போக்கில் 

சனசமூகநிலையங்களின் வகிபாகம்


   

 சனசமூகநிலையம் என்பது மக்களது வாழ்வியலில்  பின்னிப்பிணைந்த ஓர் அமைப்பாக இருந்து வருகின்றது. அவ்வவிதம் பண்டைய மக்களது பண்பாடுகள் யாவும் தொன்று தொட்டு பேணப்பட்டு வருகின்றமைக்கு ஒரு உதாரணமாக இவை விளங்ககின்றன. மனிதன் வாழ்வியல் போராட்டத்தில் பல சவால்களுககு முகம் கொடுத்து கிராமம் என்ற சிறிய அலகில் இருந்து சமூகக் கட்டமைப்புகளை வளம்படுத்தி நகரமட்டத்தில் வாழும்மக்களது வாழ்வியலைக் காட்டிலும் ஒரு சுதந்திரமான இயற்கை வாழ்வு முறைகளைப்பின்பற்ற இந்த சனசமூகநிலைகள் வழிவகை செய்கின்றன.

       அந்தவகையில் 'ஊருணி நீர்நிறைந்தற்றே உலகவாம் பேரறிவாளன் திரு' என்ற  வள்ளுவப்பெருந்தகையின் வாக்கின்பதம் ஊரிலே அனைவராலும் விரும்புமாறு மக்களிற்கு உதவி செய்பவனது செல்வம் நடு ஊரினுள் நல்ல நீர் ஊற்று       அமைந்தது போன்றது என்றதன் பிரகாரம் ஓர் கிராமத்தில் அமைக்கப்பெற்ற சனசமூகநிலையங்களும் இன , மத , மொழி , பால் பேதமின்றி அவ்வூரின் வளர்ச்சிக்கான அத்திவாரமாக விளங்குகின்றன.

      பண்டைய மக்களது வாழ்வியலில் 'ஆலயங்களே அவர்களது சேவை நிலையமாக காணப்பட்டது. அவ்விதம் கல்விக்கூடங்கள் , கலைக்கூடங்கள் , படிப்பகங்கள், பிணக்குகளை தீர்க்கும் நீதிமன்றங்கள். ஆதுலர்சாலைகள் , என்றவாறு கிராமமட்டங்களில் ஆலயங்களோ பேசுபொருளாக காணப்பட்டது. காலப்போக்கில் இன்நிலமைமாறி  மக்களின் சேவை மையமாக சனசமூக நிலையங்கள்     முதன்மை பெறத்தொடங்கியது இவ்விதம் மரத்தடி நிழலில் ஒன்று கூடல்,பின்னர் மாலைப்பொழுதினை கழிப்பதற்காக ஒன்றுகூடும் போது  , அந்நேரத்தினைப் பயனுள்ளதாகப் பயன்படுத்த பத்திரிகைப்படிப்பகம் 


          என்றவாறு கொட்டகை அமைப்பு , கட்டிடஅமைப்பு என வளர்ச்சி பெற்று இன்று தன்னுள்ளே பல சேவை அமைப்புக்களை உள்ளடக்கி கிராமத்தின்    தாய்அமைப்பாக சனசமூகநிலையங்கள் உருப்பெற்றுள்ளது. அந்தவகையில் விளையாட்டுக்கழகம் , இளைஞர்கழகம் , மாதர்சங்கம் , முன்பள்ளி, சிவில்பாதுகாப்புக்குழு , சிறுவர் பாதுகாப்புக்குழு , டெங்கு கட்டுப்பாட்டுக்குழு , பொலீஸ்குழு ,கிராமமட்ட நல்லிணக்கக் குழு, சுகாதாரமேம்பாட்டுக்குழு என்ற அமைப்புக்கள் சனசமூகநிலையத்தினை மையமாகக்கொண்டு இன்று சேவை நல்கி வருகின்றமையைக் காணமுடியும். அந்த வகையில் தன்னுள்ளே தலைவர், செயலாளர் , பொருளாளர் என்ற பிரதான நிர்வாகக்கட்டமைப்பினையும் அதனைத்தொடர்ந்து நிர்வாக உறுப்பினர்கள் புடைசூழ ஒரு பலம் வாய்ந்த அமைப்பாக கிராமத்தில் அமையப்பெற்று இருப்பதுடன் பத்திரிகைப்படிப்பகம் , என்ற பகுதிகள் ஒதுக்கப்பட்டு கிராமத்தின் இளையோர் தொட்டு முதியோர் வரை இலகுவாக வருகை தந்து இயற்கையுடன் ஒட்டியவாறு இதமான அறிவினைத்தேடுவதற்கு ஏற்ற சாளரங்கள் கொண்ட ஓர் பகுதியில் அமையப்பெற்று இருக்கும் அதேபோன்று மழலைகளைக் கவர்ந்து  அவர்கட்கு கல்வியினை ஊட்டும் ஓர் அகமகிழ் கழகமான முன்பள்ளி அமைப்புக்களையும் அதனோடு சேர்ந்த விளையாட்டுப்பகுதிகளையும் கொண்டுள்ளதுடன் மாலை நேரக்கல்வி நிலையங்களாகவும் ஊரிலுள்ள இழைஞர் யுவதிகளால் மாணவர்கட்கு கல்வி புகட்ட ஏதுவாக அமைந்துள்ளது. மட்டுமல்லாது நூல்நிலையங்கள் , கணணிப்பிரிவுகள் , கற்கைகள் போன்ற கட்டமைப்புக்களும்; இந்த சனசமூகநிலையங்களை மையமாகக் கொண்டு அமைந்துள்ளது.

         மேலும் கிராமத்தில் படித்து வேலை அற்று இருக்கும் இளைஞர், யுவதிகட்கு கைத்தொழிற்பயிற்சிகளாக, பன்னைவேலைகள் , தையல் மற்றும் அழகுப்பயிர்ச்சி நெறிகள் என்பனவும் கற்பிக்கப்பட்டு எதிர்காலத்தில் சிறந்த கைவினைஞர்களாக வலம்வர இந்த சனசமூகநிலையங்கள் செல்வாக்குச் செலுத்துவதோடு இல்லாது கிராமத்தில் ஒருபுறம் அபிவிருத்தியையும் மறுபுறம் அதற்கு தடையான பிணக்குகள் , முறண்பாடுகள் என்பதனையும் கிராமமட்டத்தில் விசாரித்து அவர்களுக்கு சாதகமான முறையில் சில தீர்ப்புக்களை வழங்குவதுடனும் தன்னைப்பார்த்துக்கொள்ள கிராமமட்டத்தில் சில யாப்புக்களையும் உருவாக்கி சேவைவழங்கும் ஓர் நிலைமையாக விழங்குகின்றதுடன்  மருத்துவமுகாம்கள், இரத்ததானங்கள் , கல்விக்கௌரவிப்புகள் போன்ற சேவையும் ஆற்றுp வருகின்றது.

       இத்தகைய கிராமங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாகவிழங்கும் அமைப்புக்கள் பெரும்பான்மையானவைகள் வலுப்பெற்றுக்காணப்படுகின்ற போதிலும் ஒருசில சனசமூகநிலையங்கள் கிராமமட்டங்களில் வலு இழந்து காணப்படுகின்றது. இருப்பினும் சில புத்திஜீவிகளால் ஓரளவு அதன் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலமையானது சில இளைஞர்ககளது சமூக அக்கறையற்ற போக்குகளும் , நிர்வாகக் கட்டமைப்புக்களை தொடர்ச்சியாக ஒரு குழு ஆக்கிரமிப்புத்தன்மை , உரியகாலத்தில் மாற்றம் செய்யப்படாத நிர்வாக முறைமைகள் , ஜனநாயகம் அற்ற நிர்வாகத்தெரிவுகள் ,  உள்ளிட்ட சில செயற்பாடுகளில் நாம் மாற்றங்களை மேலும் கொண்டுவரும்போது இத்தகைய நிலையங்களில்களில் இளைஞர் யுவதிகளின் பங்களிப்புக்கள் பெருகும் என்பது காலத்தின் திர்க்கதரிசனம்.

                                             



                                            
                                             
திரு.மன்மதராசா தசிதரன்

                                              (அபிவிருத்தி உத்தியோகத்தர்

                                                            கட்டுவன் மேற்கு)


No comments:

Post a Comment

  தமிழர் வாழ்வியலை உள்ளடக்கிய கற்பித்தல் முறை தமிழர் இல்லாத நாடு இல்லை ஆனால் தமிழர்க்கு என்று ஒரு நாடில்லை என்று நோக்கும் இற்றைக்கு மூவாயி...