Wednesday, July 5, 2017

குப்தப் பேரரசர்களின் நாணயங்கள்


வட இந்திய வரலாற்றில் கி.பி 3ஆம் நூற்றாண்டு ஆட்சிக் காலமானது பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியதொன்றாகும். வடக்கே இமயம் முதல் தெற்கே குமரிவரையுள்ள ஷத்திரிய ஷேத்திரத்தனை கொண்ட பேரரசுக் கட்டுமானத்தை ஏற்படுத்திக் கொடுத்த காலம் இதுவாகும். மிகப் பலமான இராணுவக் கட்டமைப்பின் பின்னணியில் நிலமானிய சமூக அடிப்படையில் உருவான ஒருவகையான நிர்வாக முறையே பேரரசின் எழுச்சிக்கு வித்திட்டது என்றால் அது மிகையாகாது.


இக்காலத்தில் வட இந்திய நெற்களஞ்சியமான பஞ்சாப்பும் தென் இந்தியாவின் நெற் களஞ்சியமான தஞ்சாவூரும் நேரடியாக பாடலிபுத்திரத்துடன் இணைக்கப்பட்டமை இக்காலம் வளம் மிக்க காலப் பகுதியாக அமையப் பின்னணியாகியது. இதன் காரணமாக முதல் முறையாக இந்தியப் பண்பாட்டுத் தேசிய உணர்வு தோற்றம் பெறவும் நடைமுறைப்படுத்தப்படவும் வாய்பாகியது. இதனால் புதிய கலை மரபுகள் இந்தியத்தை தழுவி எழுச்சி பெறலாயின. அத்துடன் அறிவியல், தத்துவஞான துறைகளும் வளர்ச்சி கண்டன. இவ்வாறான ஒரு செழுமையான ஆட்சியின் பின்னணியில் குப்தப் பேரரசர்கள் பல வகையான நாணயங்களை வெளியிட்டனர்.
 குப்தர் காலப்பகுதியில் பல்வேறு அரசர்கள் ஆட்சி புரிந்தாலும் கூட பேரரசர்கள் என்ற வகையில் சமுத்திர குப்தன், 2ம் சந்திர குப்தன், குமார குப்தன், ஸ்கந்த குப்தன் என்பவர்களையே குறிப்பிட முடிகிறது. இப்பேரரசர்ளால் வெளியிடப்பட்ட நாணயங்கள் பற்றி நோக்குவதே இச்சிறு கட்டுரையின் நோக்கமாகின்றது.
guptha coins

குப்த பேரரசின் சிற்பி என கூறப்படும் சமுத்திர குப்தன் கி.பி 350 முதல் 370 வரை ஆட்சி செய்தான். திக் விஜயத்தின் மூலம் ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கி குப்த பேரரசர்களுள் முதன்மையான இடத்தை இவன் பெற்றுள்ளான். இவன் ஆரம்பத்தில் குஷாணர்களைப் பின்பற்றி நாணயங்களை வெளியிட்டான். ஆயினும் பிற்காலத்தில் தனித்துவமான வகையில் நாணயங்களை வெளியிட்டுள்ளான். பெற்றோரை நினைவு கூரும் வகையில் இவனால் வெளியிடப்பட்டதாக கூறப்படும் சந்திர குப்தன் ஐ வகை (முiபெ யனெ ஞரநநn வுலிந) நாணயங்கள் தனித்துவமானவையாகும். அவற்றின் முற்பக்கத்தில் 1ஆம் சந்திர குப்தனும் குமாரதேவியும் அன்பு மீதூரப் பார்க்கும் நிலையில் காணப்படுகின்றன.


அத்துடன் நாணயத்தின் விளிம்பில் இவர்களது பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றின் பிற்பக்கத்தில் இந்தியக் கடவுளான துர்க்கையைக் குறிக்கும் வண்ணம் ஒரு பெண் கடவுளர் சிங்கத்தின் மீது அமர்ந்திருக்க அக்கடவுளைச் சுற்றி 'லிச்சவாய' என்ற வாசகம் உயரிய தேவநாகரி வரிவடிவத்தில் காணப்படுகிறது. இது லிச்சவி வம்சத்துடன் குப்தர்கள் கொண்ட தொடர்பே குப்தர்கள் பேரரசு நிலையை எய்துவதற்கு காரணமாகியது என்ற கருத்தை எடுத்துக் காட்டுவதாகக் கூறுவர். அத்துடன் துர்க்கையம்மன் சிம்மாசனத்தில் வீற்றிருப்பது லிச்சவியர் வீரத்தில் சிறந்தவர்கள் என்பதனையும் அநீதியை போக்கி வெற்றியைப் படைப்பவர்கள் என்பதனையும் குறிப்பிட்டு நிற்பதாகவும் கொள்ளலாம்.
சமுத்திர குப்தனின் மற்றொரு வகை நாணயங்களாக செங்கோஸ் வகை நாணயங்கள் (ளுஉநிவசந வுலிந) காணப்படுகிறது. இவ்வகை நாணயங்களின் முற்பக்கத்தில் குஷாண மரபில் உடையணிந்து கையில் செங்கோலுடன் மன்னன் நிற்கும் நிலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளான். மன்னனின் பாதத்தின் கீழ் 'சமுத்திர' என்ற வாசகம் நிலைக்குத்தாக காணப்படுகிறது. நாணயத்தின் பிற்பகுதியில் லஷ்மி சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பது போலவும் அவரின் பாதங்களை தாமரை தாங்குவது போலவும் காணப்படுகிறது. இந் நாணயத்தில் 'உலகத்திலே வெல்ல முடியாத பகைவர்களின் கோட்டையை வென்று தனது புகழை சுவர்கம் வரை பரப்பியவன்' என்ற மன்னனின் விருதும் பொறிக்கப்பட்டுள்ளது. இவ்வகை நாணயங்களை ளுவயனெயசன வுலிந நாணயங்கள் எனவும் கூறுவர்.
சமுத்திர குப்தனின் மற்றொரு வகையான அம்பு வில் வகை (யுசஉhநச வுலிந) நாணயங்களின் முற்பக்கத்தில் இடது சாயலாக அம்பு, வில் தாங்கிய மன்னனின் பாதத்தின் கீழ் 'சமுத்திர' என்ற பதமும் 'எந்தப் பகைவராலும் வெற்றி கொள்ள முடியாதவன், இப்பூவுலகத்தை வெற்றி கொண்டவன், தனது இரக்க சிந்தனையால் சுவர்க்கத்தையும் வெற்றிகொண்டவன்' என்ற விருதும் பொறிக்கப்பட்டுள்ளது. நாணயத்தின் பிற்பகுதியில் இருக்கும் நிலையில் லஷ்மியும் 'அப்ரதிரதா' என்ற வாசகமும் காணப்படுகிறது.

guptha period

இவரது போர்க் கோடாரி வகை (டீயவவடநயஒந வுலிந) நாணயங்களின் முற்பக்கத்தில் மன்னன் போர்க் கோடரியுடன் நிற்கும் நிலையில் காணப்படுகின்றார். அவருடைய தலையின் மேற்புறமாக மூன்றாம் பிறைச் சந்திரன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளார். இது மன்னனை வணக்கத்துக்குரியவனாகக் குறிப்பிடச் சித்தரிக்கப்பட்டுள்ளது எனலாம். அவனது பாதத்தின் கீழ் 'சமுத்திரா' என்ற பதமும் சுற்றிவர 'கிருதாந்த பரசுர் ஜபத்யஜித் ராஜேஜெதாஜிதா' என மன்னனின் விருது வடமொழியில் பொறிக்கப்பட்டுள்ளது. நாணயத்தின் பிற்பக்கத்தில் பத்மாசனத்தின் மீது லஷ்மி வீற்றிருப்பது போல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அவரது பாதத்தின் கீழ் 'கிருதாந்த பரசு' என்ற வாசகம் காணப்படுகிறது. இவ்வகை நாணயங்களை சமுத்திரகுப்தன் ஆரிய வர்த்தப் பிரதேசங்களை வெற்றி கொண்ட பின்பு அதன் ஞாபகமாக வெளியிடப்பட்டதாகக் கூறுவர்.
சமுத்திர குப்தனது மற்றொரு நாணய வகையாகப் புலியை வேட்டையாடும் வகை நாணயங்கள் (வுபைநச ளடய வுலிந) காணப்படுகின்றன. இவற்றின் முற்பக்கத்தில் புலியை வேட்டையாடும் நிலையில் மன்னன் இந்திய பாரம்பரிய உடைகளான வேட்டி, தலைப்பாகையுடன் தீட்டப்பட்டுள்ளான். மன்னனுடைய பாதத்தின் கீழ் 'வியாக்ரபராக்ரம' விருது பொறிக்கப்பட்டிருப்பதனைக் காணலாம். இந்நாணயங்களின் பிற்பக்கத்திலே கங்காதேவி மகரத்தில் அமர்ந்திருப்பது போலவும் கீழ்ப்பகுதியில் 'ராஜ சமுத்திரகுப்தன்' என்ற விருதும் காணப்படுகிறது. இவ்வகை நாணயங்களில் சமுத்திரகுப்தன் வங்காளத்தை வெற்றி கொண்டு கங்காதேவியை அரவணைத்த காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது.


இம்மன்னனின் இளமைப் பெயரான காஜா என்பதைக் குறிக்கும் காஜா வகை (முயஉhய வுலந) நாணயங்களை நோக்கி, அவற்றின் முற்பக்கத்தில் மன்னன் நிற்கின்ற நிலையில் சக்கரத்தின் பின்னணியில் காணப்படுகிறார். அவருடைய இடது பக்கத்தில் கருடச்சின்னமும் கீழே 'சமுத்திரா' என்ற வாசகமும் காணப்படுகிறது. விளிம்பில் 'காஜா' இப் பூலோகத்தை வெற்றி கொண்ட பின்னர் தனது உள்ளக் கருணையின் வாயிலாகச் சுவர்க்கலோகத்தை வெற்றி கொண்டான் என குறிக்கப்பட்டுள்ளது. இந்நாணயங்களின் பிற்பக்கத்திலே நிற்கின்ற நிலையில் லஷ்மி விஷ்ணுவுடன் வலது கரத்தில் பாசத்தையும் இடது கையில் தாமரையுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளார். பராக்கிரம என்ற வாசகமும் காணப்படுகிறது. இவ்வகை நாணயங்கள் சமுத்திர குப்தனை விஷ்ணுவின் ஒரு அவதாரமாகக் கொள்ள வைப்பதாகக் கூறப்படுகிறது.
சமுத்திரகுப்தனின் இசை நாட்டத்தை வெளிப்படுத்தும் வீணை வகை (டுலசளைவ வுலிந) நாணயங்களின் முற்பக்கத்திலும் 'மகாராஜா சிறி சமுத்திர குப்தா' என்ற விருது காணப்படுகிறது. பிற்பக்கத்தில் சரஸ்வதி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சமுத்திரகுப்தனின் இசையின் தெய்வத்தை அரவணைத்தான் என்பதை வெளிப்படுத்துவதாக அமைகிறது எனலாம்.
இவனது எட்டாவது வகை நாணயமாக காணப்படுவது அசுவமேதயாக வகை நாணயங்களாகும். இவ்வகை நாணயமானது சமுத்திரகுப்தனுடைய அரசியல் வரலாற்றைக் கூறும் அலகபாத் பிரசஸ்தியானது கரிசேனரால் எழுதப்படுவதற்கு முன்பே சமுத்திரகுப்தன் இறந்தான் என்ற வரலாற்று ஐயத்தை தீர்த்து வைத்த வகையில் முக்கியத்துவம் பெறுகிறது எனலாம். இந் நாணயத்தின் முற்பக்கத்தில் 'அரசருக்கெல்லாம் பேரரசனாகிய இவன் இப்பரந்த பூவுலகத்தை வெற்றி கொண்டான்' எனப் பொறிக்கப்பட்டுள்ளது. பிற்பக்கத்தில் 'அசுவமே பராக்கிரம' என்ற விருதும் காணப்படுகிறது. இந்நாணயமானது சமுத்திர குப்தன் முறைப்படி திக் விஜயத்தினை வெற்றியுடன் முடித்தான் என்பதனை உறுதிப்படுத்துகிறது எனலாம்.
சமுத்திரகுப்தனுக்குப் பின்பாக அவனது மகனான 2ஆம் சந்திரகுப்தன் கி.பி376 முதல் 414 வரை ஆட்சி செய்தான். குப்தப் பண்பாட்டைப் பொற்காலம் எனச் சிறப்பிக்கக் காரணமாக அமைந்த வகையில் இம் மன்னனது அமைதியான ஆட்சிக்காலம் சிறப்புப் பெறுகிறது எனலாம். இம் மன்னன் தந்தையைப் பின்பற்றி நாணயங்களை வெளியிட்ட போதும் பல புதிய வகை நாணயங்களையும் வெளியிட்டுள்ளான். புதிய வகை நாணயங்களில் குதிரை மனிதன் வகை (ர்ழசளநஅயn வுலிந) நாணயங்களின் முற்பக்கத்தில் பரம பாகவத மகாராஜாதிராஜா ஸ்ரீ சந்திர குப்த என்ற விருது பிற்பக்கத்தில் 'அஜத விக்ரமஹ' என்ற விருதும் காணப்படுகிறது.
இவனது மற்றொரு வகை நாணயங்கள் சிங்கத்தை வேட்டையாடும் வகை (டுழைn ளுடயலநச வுலிந) நாணயங்கள் ஆகும். இவை சந்திர குப்தன் சகசத்திராபுகளை வென்றதைக் குறிப்பிடுகின்றன எனலாம். இவனது சத்திரவகை (உhயவவசய வுலிந) நாணயங்களின் முற்பக்கத்தில் 'சர்வ உலகத்தையும் வென்ற விக்கிரமாதித்தியன் தனது நல்ல செயல்களால் சுவர்க்கத்தையும் வென்றவன் என்ற விருது காணப்படுகிறது. இவனது புதிய 'சக்ரவிக்கிரம' வகை நாணயங்களின் (ஊhயமசயஎமைசயஅய வுலிந) முற்பக்கத்தில் சக்ர புரவுர் குருத்தோலையில் கட்டப்பட்ட மூன்று  பொருட்களை மன்னருக்கு அளிப்பது போன்று காணப்படுகிறது. இம் மூன்று பொருட்களும் அதிகாரம், சக்தி, புத்திமதி எனவும் இவை வெற்றிக்கு மிக அவசியம் என்பதையும் குறிப்பிடும் வகையில் பொறிக்கப்பட்டுள்ளது எனப்படுகிறது. பிற்பக்கத்தில் ஷசக்ரபுருஷ' விருது காணப்படுகிறது. இவனது மற்றொரு புதிய மஞ்சவகை (ஊழரஉh வுலிந) நாணயங்களும் முக்கியத்துவம் பெறுகின்றன எனலாம்.
2ம் சந்திரகுப்தனுக்குப் பின் அவனது மகனை 1ம் குமார குப்தன் கி.பி 415 முதல் 450 வரை ஆட்சி செய்தான். இவனது நாணயங்களில் வாளேந்திய மனித வகை (ளுறழசனளஅயn வுலிந) நாணயங்கள் முக்கியமானவையாகும். இவரது நாணயங்களில் மயிலுக்கு உணவு ஊட்டும் காட்சி காணப்படுவது பொது இயல்பாகும். இவரது மயில் வகை (Pநயஉழஉம வுலிந) நாணயங்களின் முற்பக்கத்தில்  'ஜெகதீஸ்வகுணைர் குணராசி மகேந்திர குமார' என்ற விருது காணப்படுகிறது. பிற்பக்கத்தில் 'மகேந்தர குமார' என்ற விருது காணப்படுகிறது. பிற்பக்கத்தில் 'மகேந்தர குமார' என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. இவ்வகை நாணயங்களைக் கார்த்திகேய வகை (முயசவாமைநலய வுலிந) நாணயங்கள் எனவும் கூறப்படுவதுண்டு. இவரது காண்டாமிருகத்தை வேட்டையாடும் வகை (சுhiழெஉநசழள ளுடயலநச) நாணயங்களும் முக்கியமானவையாகும். இவர் யானை மேல் சவாரி செய்யும் வகை (நுடநிhயவெ சனைநn வுலிந) நாணயங்களும் சிறப்பானவை. இவரது மற்றொரு நாணயமாக (யுpசயவபைவய வுலிந) அபராஜித வகை நாணயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. இவ்வாறு புதிய நாணயங்களுடன் முன்னைய மன்னர்களைப் பின்பற்றியும் நாணயங்களை வெளியிட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
குப்தப்பேரரசர்கள் வரிசையில் இறுதியாக குறிப்பிடத்தக்கவர் ஸ்கந்த குப்தர் ஆவார். இவர் கி.பி 455 முதல் 467 வரை ஆட்சி செய்தார். இவரது நாணய வெளியீடுகள் யாவும் முன்னைய மன்னர்களைப் பின்பற்றியதாகவே காணப்படுகிறது. இவர் தங்கத்தால் நாணயங்களை வெளியிட்டபோதும் பெருமளவாக வெள்ளி வகை நாணயங்களையே வெளியிடடுள்ளார். இவரது நாணயங்களில் தோகை விரித்தாடும் மயிலினைக் காணலாம். இவரது புதிய வகை நாணயங்களில் ஒன்றில் காளை மாடும் மற்றையதில் தகனப்பலிப்பீடமும் பொறிக்கப்பட்டுள்ளன. அத்துடன் இவரது மன்னன் - லஷ்மி வகை (முiபெ யனெ டுரஒhஅi வுலிந) நாணயங்களில் கருடக்கொடி காணப்படுவது குறிப்பிடத்தக்கது. இக்கொடியானது ஸ்கந்த குப்தன் கூணர்களுடனான போரில் வென்றதைக் குறிப்பதாகக் கூறப்படுகிறது. குப்தர் ஆடசியின் சிறப்பு மங்கத்தொடங்கியமை இவர் வெள்ளி நாணயங்களை வெளியிட்டதிலிருந்து அறிய முடிகிறது.
இவ்வாறு குப்த பேரரசர்களால் வெளியிடப்பட்ட நாணயங்கள் குப்த வரலாற்றை அறிவதற்கு உதவும் மூலங்களாக உள்ளன எனலாம். ஒரு கால வரலாற்றை அறிவதற்கு காலம், பிரதேசம் என்பன முக்கியமானவையாகும். காலத்தின் வரையறை காரியத்தின் மேல் ஏற்பட்டு அது நிகழ்ந்த பின்னர்  அது வரலாறு ஆகின்றது என்பது உண்மை. இதற்கமைய குப்தர் கால அரசியல் நடவடிக்கைகளையும் அச் சம்பவங்கள் நிகழ்ந்த காலத்தினையும் காட்டும் ஓர் மூலமாக இந்நாணயங்கள் காணப்படுகின்றன எனலாம். சமுத்திர குப்தன் தனது அனைத்திந்திய மயமாக்க அமைப்பை ஏற்படுத்துவதற்குக் கையாண்ட ஒரு பண்பாட்டு நடவடிக்கையாக அவரது தங்க நாணய வெளியீடுகளைக் கூறலாம். அத்துடன் முன்னைய காலங்களில் கிரேக்கப் பெண் கடவுளர்களை நாணயங்களில் பொறித்தனர். ஆனால் இக்காலத்தில் சுதேச பெண் தெய்வங்களை நாணயங்களில் பொறித்து  இந்திய மயமாக்கலை சமய ரீதியாக நாணயங்களினூடாக நடைமுறைப்படுத்தினர் எனலாம். இந்தியத்தைத் தழுவிய இந்நாணயங்களே பிற்கால விக்கிரகவியலுக்கு வழிவகுத்தது எனலாம். இவ்வாறு குப்தப் பேரரசர்களால் வெளியிடப்பட்ட நாணயங்கள் மூலம் அக்கால இந்திய மறுமலர்ச்சி கோட்பாட்டினையும், தேசிய விழிப்புணர்ச்சியையும் இந்தியக் கலைக் கோட்பாடுகள் பற்றியும் அறியக் கூடியதாக உள்ளதெனில் மிகையாகாது.










உசாத்துணை நூல்கள்





  1. பரமெஸ்வரி லால் குப்தா, 1969  நாணயங்கள் பழனியப்பா பிரதர்ஸ் பக். 78-84.
  2. கலைக்களஞ்சியம், 'நாணயவியல்', தொகுதி 6 பக்கம்.357-359.


No comments:

Post a Comment

  கிழக்கிலங்கையின் தொன்மையை பறைசாற்றும்                         திருமங்கலாய் -சிவனாலம். கள ஆய்வுத்தொகுப்பு   கிழக்கிலங்கையில் திருகோணம...