Tuesday, March 14, 2023

அறிவார்ந்த சமூகத்திற்கான வாசிப்பு





உள்ளங்கையளவு சுருங்கி வரும் உலகத்தில் எந்திரமாய் இயங்கி வரும் மனிதனது வாழ்வியலோட்டத்தில் 'வாசிப்பு' என்பது வாயடைத்துப் போன ஓர் நிலையினை காணமுடிகின்றது. இப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிரினங்களிலும் மனிதனுக்கு மட்டுமே உள்ள சிறப்பு ஆறு அறிவுடன் இயங்குவது தான். இதில் ஆறாம் அறிவான பகுத்தறிவிற்கே மிகவும் முக்கியத்துவம் உண்டு. காரணம் அதுவே மனிதனை இவ்வளவு தூரம் பரிணாம வளர்ச்சியடைய வைத்திருக்கின்றது என்றால் மிகையாகாது. நல்லது கெட்டது என்பதனை கேட்டல், பார்த்தல், வாசித்தல் போன்றவற்றின் அறிவு முதிர்ச்சியே மனிதப்பரிணாம வளர்ச்சியாகும்.

பண்டைய காலம் தொட்டு தற்காலம் வரை மனித சமூகத்தின் உயிர் நாடியாக 'வாசிப்பு' என்பது திகழ்ந்துள்ளது என்பதனை மறுக்கவோ மறுதலிக்கவோ முடியாத ஒன்றாகும். இதனால் தான் 'வாசிப்பதால் மனிதன் பூரணமடைகிறான்.' எனக் கூறப்படுகின்றது. இவ்விதம்


வாசிப்பானது புராதன காலத்தில் மொழி என்ற கட்டமைப்பு தோன்ற முன்பே குறியீடுகளை வாசித்து பொருள் புலர்ந்து நம் புத்திக் கூர்மையை வளம்படுத்தியமையை இன்றைய ஆய்வுகளில் கிடைக்கும் மட்பாண்டங்கள், கல்வெட்டுக்கள், நாணயங்கள் போன்றவற்றில் உள்ள குறியீடுகளைக் கொண்டு காட்ட முடிகின்றது. இத்தகைய தொடர்ச்சியான வாசிப்பானது மரத்தடி நிழல்களிலும் சனசமூக நிலையங்களிலும், பள்ளிகளிலும், பிரிவேனாக்களிலும், அறநெறிகளிலும், பிரயாணங்களிலும், சிறைச்சாலைகளிலும் மேற்கொள்ளப்பட்ட வாசிப்புப் பழக்கத்தின் விளைவே இவ் உலகம் பல அறிவியல் மேதைகளை உருவாக்கக் காரணமாக அமைந்தது.

     இவ்வாசிப்பானது மேல் எழுந்தவாரியாக வாசித்தல் 'நுனிப்புல் மேய்தல் போல்...' எனவும் ஆழமாக வாசித்தல் என இரண்டுவகைக்குள் அடக்குவர் கதை, சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல், பத்திரிகை, நகைச்சுவை, பொழுதுபோக்கு, அறிவியல், வானிடம், சோதிடம், கணிதவியல், போன்ற பல அறிவுப் பொக்கிஷங்களை வாசிப்பது தேடல், கிரகித்தல், ஆராய்தல், கற்பனை வளம் மற்றும் எழுத்துப்பிழை இன்றி எழுதும் ஆற்றல் சரியான முறையில் சொற்களின் பிரயோகம் போன்ற அறிவாற்றலை வளர்க்கும் சாதனம் ஆகும். இத்தகைய அறிவு மிக்க புத்தகங்களின் வாசிப்பானது ஆளுமை மிக்க சமுதாயத்தை கட்டியமைக்க உதவ முடியும்.

'வாளினுடைய கூர்மையும் நூலினுடைய கூர்மையும் ஓர் நாட்டை ஆளும்...' என்று கூறுவார்கள். இன்றைய கால கட்டத்தில் நூலினுடைய கூர்மைதான் உலகத்தையே ஆள்கின்றது என்றால் மிகையாகாது. இதனாலேயே மார்ட்டின் லூதர் 'துப்பாக்கியை விடவும் பயங்கரமான ஆயுதம் புத்தகங்கள்..' எனக் கூறியுள்ளார்.

இத்தகைய வாசிப்புப் பழக்கமானது ஆன்மாவைக் கூர்தீட்டும்அறிவை மெருகேற்றும் அனுபவங்களை அடுக்கடுக்காய் அணிதிரட்டி அறிவுரைகளை அள்ளித்தரும் அமுதசுரபியாக விளங்குகின்றது. புத்தகம் ஒரு சிறந்த நண்பன், அற்புதமான வழிகாட்டி. வெறும் எழுத்துக்களால் மட்டுமான காகிதங்களின் கூட்டு அல்ல. அது ஒரு ஆன்மாவின் அசரீரி, அது அமைதியாய் உறங்கும் அந்தராத்மாவை, வாசிப்பு தட்டியெழுப்பும் அறிவுரையும் அனுபவமும் அள்ளித்தரும். பொது அறிவுகளும் பொன்னான கருத்துக்களையும் பொழிந்து தள்ளும் கார்மேகமாக விளங்குகின்றது.

மனிதனை மனிதனாக வையத்தில் வாழ வைப்பதற்கு கல்வியும் அதனோடு இணைந்த வாசிப்புப் பழக்கமுமே உன்னதமாக திகழ்கின்றது இதனையே 'நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான் கற்ற நூ

லளவே ஆகுமாம் நுண்ணறிவு' என ஒளவையார் நாலடியாரில் நயந்து கூறியுள்ளமை வாசிப்பின் மகத்துவத்தினையும் கல்வியின் சிறப்பினையும் காட்டுகின்றது. மேலும்'தொட்டனைத்

தூறும் மணற்கேணி மாந்தற்கு

கற்றனைத்தூறும் அறிவு..' என்கிறார் வள்ளுவப் பெருந்தகை அதாவது மண்ணை எவ்வளவு ஆழமாக தோண்டினாலும் நீரானது சுரப்பதைப் போல் நல்ல நூ

ல்களை வாசிப்பதால் மனிதர்க்கு நல்லறிவு தோன்றும் என்பது புலப்படுகின்றது. நல்ல நூ

ல்களைப் படிக்கப் படிக்க அறிவானது வளர்கின்றது. இதனை நான் சொல்லக் காரணம் நஞ்சு கொடுக்கப்படும் வரை கிரேக்க நாட்டு நூ

ல்களைப் படித்துக் கொண்டு இருந்தவர் சாக்ரட்டீஸ். இறக்கும் தருவாயிலும் கூட வாசிப்பின் மீது கொண்ட அவரது ஆழமான அன்பு இன்னும் நிலைத்து நிற்கின்றது.

இவ்விதம் வாசிப்பின் சுவையறிந்து, நூ

ல்களின் திறன் அறிந்து, வாசித்தால் வாழ்வியலின் வெற்றியம்சங்களை உணர்ந்து மனம் திறந்து அதன் பெருமையுரைத்துக் கொள்ளலாம். பிரபஞ்ச முடிவுவரை நிலைத்து நிற்கும் பிரபலங்கள் சிலரின் அனுபவத் தொகுப்புக்கள் வாசிப்புப் பழக்கத்தை படம் பிடித்துக் காட்டுகின்றன.

'நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னை சந்திப்பவனே என் தலை சிறந்த நண்பனாவான்..' ஆப்ரகாம் லிங்கன் கூறியுள்ளார். மேலும் 'வேறு எந்த சுதந்திரமும் வேண்டாம் சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் எனக்கு அனுமதியுங்கள்' என நெல்சன்மண்டேலாவும், 'ஒரு நூ

லகம் திறக்கப்படும் போது ஊரிலுள்ள பல சிறைச்சாலைகள் மூடப்படும்..' என சுவாமி விவேகானந்தரும், 'ஆயிரம் புத்தகங்களை வாசித்தவன் ஒருவன் இருந்தால் அவனைக்காட்டுங்கள் அவனே எனது வழிகாட்டி..' என ஜூலியர்சீசரும், தான் படித்த புத்தகத்தை முடித்துவிட வேண்டும் என்பதற்காக அறுவை சிகிச்சையைத் தள்ளிப்போடச் சொன்னவர் அறிஞர் அண்ணா, படிப்பகங்களிற்கு அருகில் உறங்கும் இடத்தைக் கேட்டார் அம்பேத்கர். 33 ஆண்டுகள் நூ

லகத்தில் மூழ்கி 'மூலதனம்' எனும் கம்னீனச சித்தாந்தத்தை கண்டுபிடித்தார் கார்ல்மார்க்ஸ். இத்தகைய அறிஞர்கள் வாசிப்பதற்கு முதன்மை  கொடுத்துள்ளார்கள் என்றால் வாசிப்பு அந்தளவிற்கு அவர்களது வாழ்க்கைக்கு நிறைய பாடங்களைக் கற்றுத்தந்துள்ளது. கம்பனுடைய ஒரு செய்யுள், பாரதியினுடைய ஒரு பாட்டு ஏன் கண்ணதாசனுடைய ஒரு வரி நம்முடைய வாழ்க்கையையே புரட்டிப் போட்டுவிடும். இதுவே வாசிப்பினுடைய மகத்துவமும். ஒருவரி பல அர்த்தங்களையும் அனுபவங்களையும் பெற்றுத்தருகின்றது.


இத்தகைய மகத்தான வாசிப்புப் பழக்கமானது இன்றைய நவீன உலகில் சமூக வலைத்தளங்களின் அதிகரித்த பாவனை வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கின்ற போதிலும் சாணேற முழம் சறுக்கிய கதையாய் அதில் உள்ள ஏனைய பல அம்சங்கள், இலத்திரனியல் விளையாட்டுக்கள், நண்பர்கள் மற்றும் புதியவர்களுடனான அரட்டைகள், முகநூ

ல் பாவனை, கட்டணமின்றிய தொலைபேசி வசதிகள் போன்றன பொன்னான நேரத்தை விரயமாக்கி வாசிக்கும் பழக்கத்தை கணிசமான அளவிற்கு குறைத்துவிட்டன என்பதும் கசப்பான உண்மையே!

இத்தகைய நிலைமை மாறவேண்டும். மாணவர்கள் பாடப்புத்தகத்தைத் தாண்டியும் வாசிப்புப் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். இது பெற்றோர்களது தலையாய கடமையாகும் அதாவது 

'வா வாசிக்கலாம் என்கிறது புத்தகம்.. 

வா சிக்கலாம் என்கிறது சமூகவலைத்தளம்..' இதனைத்தாண்டியும் பிள்ளைகளிடம் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது உலக நியதியாகும். இதனால் தான் குழந்தை கருவில் இருக்கும் போதே தாய் வாசிக்க வேண்டும் என்று சொல்லப்படுகின்றது.

எனவே நாட்டில் வாசிப்புப் பழக்கத்தை உருவாக்கும் நோக்கத்திற்காக 2004ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதன் முதலாக இலங்கை கலாசார அமைச்சின் நிர்வாகத்தின் கீழ்த் தேசிய நூ

லகம் மற்றும் ஆவணவாக்கல் தேசிய சபையினால்

National Library and Documentation Service Board) ;   தேசிய வாசிப்பு மாதமாக பிரகடனப் படுத்தப்பட்டு நலிவடைந்த வாசிப்பை மீள புத்துயிர் ஊட்டும் வகையில் ஒக்டோபர் மாதத்தில் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்பக் கல்லூரிகள், பிரிவேனாக்கள், கிறிஸ்தவ மிஷநெறிகள், ஆலய அறநெறிகளில் வாசிப்புத் தொடர்பாக பல ஆக்க
பூர்வமான நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எடுத்துக்காட்டாக அண்மைக் காலங்களில் வட பகுதியில் அமைந்துள்ள நூலகங்கள் தனக்கென ஓர் தனித்துவமான சிறப்பியல்புகளைக் கொண்டு

விரிந்து கிடக்கும் பிரபஞ்சத்தில் சரிந்து கிடக்கும் வாசிப்பானது நிமிர்ந்து நின்று மேன்மையடைய வாசிப்புப் பழக்கம் நிலைபெற வேண்டும். இல்லையேல் காலம் முழுவதும் உடல் உழைப்பை நம்பி, மாடாய் உழைத்து, ஓடாய்த் தேய்ந்து, போவதனைத் தவிர வேறு வழியில்லை. அதற்காகவாவது படிக்க வேண்டும். மாணவ சமூகங்களே ஒன்றைமட்டும் புரிந்து கொள்ளுங்கள்! பணக்காரர்களின் மாளிகையில் பிறக்கும் குழந்தைகளின் கால்களைத் தாங்குவதற்கு பல தோள்கள் உள்ளன. ஆனால் ஏழைகளின் குடிசையில் பிறக்கும் குழந்தைகளின் தோள்களிற்கு சுமைகள் மட்டுமே காத்திருக்கின்றன. பணக்கார வீட்டில் பிள்ளைகள் வளர்ந்து பிறக்கின்றார்கள்É ஏழைவீட்டில் பிள்ளைகள் பிறந்து வளர்கிறார்கள். வளர்ந்து பிறப்பது வாரிசு உரிமை, பிறந்து வளர்வது பிறப்பின் உரிமை. அதற்காகவாவது படிக்க வேண்டும். அதற்கு வாசிப்பு வேண்டும். வாசிப்போம்É நல்ல நூல்களை நேசிப்போம்É வாழ்க்கையை யாசிப்போம்.


மன்மதராசா தசிதரன்.

அபிவிருத்தி உத்தியோகத்தர்,


 


No comments:

Post a Comment

  தமிழர் வாழ்வியலை உள்ளடக்கிய கற்பித்தல் முறை தமிழர் இல்லாத நாடு இல்லை ஆனால் தமிழர்க்கு என்று ஒரு நாடில்லை என்று நோக்கும் இற்றைக்கு மூவாயி...