Sunday, March 26, 2023

 


கிழக்கிலங்கையின் தொன்மையை பறைசாற்றும்                         திருமங்கலாய் -சிவனாலம்.

கள ஆய்வுத்தொகுப்பு

 


கிழக்கிலங்கையில் திருகோணமலை மாவட்டத்திற்கு இந்து சமய வரலாற்றில்தனிச்சிறப்புண்டு. அதிலும் சிவ வழிபாட்டின் தொன்மை பெருமைக்கு நிகராக திருமங்கலாய்சிவனாலயமும் திகழ்ந்துள்ளது என்பதை ஆலயத்தின் அழிந்த பாகங்கள், ஆலயத்தின்பெருமை கூறும் சாசனங்கள் ஆலய தலபுராணம் என்பன எடுத்துக்காட்டி நிற்கின்றன.

மக்கள்இவ்வாலயத்தின் தோற்றம் தொடர்பாக மக்கள் மத்தியில் பல ஐதீகங்கள் நிலவிவருகின்றது. அவ்விதம் இப்பிராந்தியத்தில் வாழ்கின்ற சிலர்;ஒருபரம்பரை பரம்பரையாக செவிவழியாக கேள்வியுற்ற செய்தி அயோத்திலிருந்து திருகோணமலைக்கு சூரிய குடும்பத்தைச் சேர்ந்த சிங்கபூதரன் வரும் போது இலிங்கம் ஒன்றினைக் கொண்டு வந்து திருமங்கலாயில் வைத்து வழிபாடுஇயற்றினான் எனவும்.அகஸ்தி முனிவர் அருகில் உளள் பிராந்தியத்தில் இலிங்கம் ஒன்றை வைத்து சிவன்கோவில் ஒன்றை அமைத்ததாகவும் அதன் பின்னர் சிங்க பூதரன் திருமங்கலாயில்கோயில் அமைத்தான் என்றும் பிரதேசவாசிகள் கூறுகின்றனர். இவ்வாறு அகத்தியர்ஸ்தாபனம் நடைபெற்ற இடத்தில் பிரசித்திபெற்ற சிவனாலயம் ஒன்று இருந்தமைக்கானஆதாரங்கள் எம்மால் கள ஆய்வின் மூலம் கண்டுகொள்ள முடிகின்றது.


இங்கு சிவலாயம் இருந்த இடத்தில் லிங்கம்
, நந்தி, பலிபீடம், சுப்பிரமணியர் அகஸ்திதேவர் கோயில், வாயில் கற்கள், கோமுகி, அபிஸேக வாசனைத் திரவியங்கள்அரைக்கும் முக்கூட்டுக்கல், வாசற்படிக்கற்கள், தூண்கள் போன்ற திருமங்கலாய்சிவனாலயத்தை ஒத்த எச்சங்கள் எம்மால் இனங்காண முடிகின்றது.

ஆனால் இவ்வாலய வரலாறு கூறும் தல புராணமானது இலங்கையில் கிழக்குப்பகுதியில் பல மன்னர்கள் பன்னெடுங் காலத்திற்கு முன்பே ஆண்டு வந்தனர்கள் என்றும் இந்திய மன்னர் பரம்பரையைச் சேர்ந்த சிங்க பூதரன் என்பவன்அயோத்திலிருந்து இலங்கைத்துறை என்று சொல்லப்படும் இடத்தில் கப்பலில் வந்துஇறங்கினான் எனவும் அப்போது திருமங்கலாய் பகுதியில் ஆட்சிபுரிந்த எழில்வேந்தன் மகளாகிய திருமங்கையை திருமணம் செய்து திருக்கரைசயம்பதியில் அரண்அமைத்து நாட்டை ஆண்டு வந்தான் எனவும் அரண் அமைத்த இடத்திற்கு இரணியன்குன்று என்ற பெயர் காணப்பட்டதுஎனவும்இரணியன்கொட்டுஎனவழங்கப்பட்டுவருவதாகவும்இவ்வாறுசிங்க பூதரன் திருமங்கையாகியோரின் வழிபாட்டிற்காகதிருமங்கலாய் சிவன் கோயில் அமைக்கப்பட்டதாக திருக்கரைசைபுரம் கூறுகின்றது


.
இவ்விதம் திருமங்கலாய் ஆலயம் அமைந்த பகுதியில்களஆய்வினைமேற்கொண்ட போது இங்கு கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுக்களைக் ஆதாரமாகக்கொண்டு இவ்வாலயம் கி.பி 10ம் நூற்றாண்டில் வழிப்பாட்டில் இருந்தமையை உறுதியாகக் கூற முடிகின்றது. ஆனால் அதற்கு முன்னரே ஆலயம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும் ஆலயம் அமைந்துள்ள சுற்றுவட்டாரத்தில் ஆய்வின் போது கூரை ஓடுகள் பலவகையான மட்பாண்டங்கள் சிதைவுகள் சுடுமண் உருவங்கள் இனங்காண முடிந்ததுடன் இவ் மட்பாண்டங்கள் ஏழாம், எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என  இனம் காண முடிகிறது

இச்சான்றாதாரங்களின் மூலம் இவ்வாலயம் பல்லவ, சோழர் காலங்கட்கு முன்னரே மண், மரம், சுதை போன்றவற்றால் அமைக்கப்பட்டு வழிபடப்பட்டு இருக்கலாம் பின்பு பல்லவர், சோழர் காலத்தில் சமகாலத்திராவிடக்கலை மரபிற்கு உட்பட்டு ஆலயம் அமைக்கப்பெற்று இருக்கலாம் என்பதனை ஆலய அமைப்பு, கட்டுமானம், கலைமரபுகள் எடுத்துக்காட்டுகின்றன.


 இவ்வாறு தோற்றம் பெற்ற ஆலயம் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமையப்பெற்றதுடன் கர்ப்பக்கிரகம் அர்த்த மண்டபம், மகா மண்டபம் என்பனவற்றோடு கோபுரங்களையும் கொண்டு ஆலயம் அமைக்கப் பெற்றிருந்ததோடு இதன் எழுந்தருளியாக கந்தலிங்கேஸ்வரர் என்ற திருவுருவம் அமைக்கப்பெற்று வழிபாடுகள் இயற்றப்பட்டவிளங்கியதுடன் ஆடி அமாவாசை தினத்திலும், மகர மாதத்திலும் தீர்த்தமாட கந்தலிங்கேஸ்வரப் பெருமான் அம்பாள் சமேதாராய் மகாவலி கங்கைக்கரைக்கு எழுந்தருழுவது வழக்கமாக காணப்பட்டதுடன் அதே நாள் அதே நேரம் அகஸ்தியரால் கட்டப்பட்ட ஆலயத்தின் எழுந்தருளியும் தீர்த்தமாட மககவலி கங்கைக்கரைக்கு வருவதும் இரு தெய்வங்களும் நேர் நேர் திசையில் சந்திக்கும் அந்தத் திருவிழா காட்சியை கண்கொண்டு பார்ப்பதற்கு பல ஆயிரம் மக்கள் திரண்டு வருவார்கள் என்று அடியார்களால் கூறப்படுவதுடன் ஆறுகாலப் பூசைகளும் பூசைகளும் நடைபெற்ற ஆலயமாக இவ்வாயம் திகழ்ந்திருந்தது.

ஆனால் 1985ற்குப் பின்னர் இப்பிராந்திய மக்கள் கொள்ளை நோயினால் இடம்பெயர்ந்தார்கள் எனப்படுகின்றர். சிலர் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததால் இடம்பெயர்ந்தார்கள் என்ற கருத்து மக்களிடையே காணப்படுகின்றது. இவ்வாறு மக்கள் இடம்பெயர்ந்தமையால் ஆலயத்தைக் காடு சூழ்ந்து கொண்டதுடன் ஆலயத்தின் பாகங்கள் கலையழிவுக் கொள்ளைக்காரர்களாலும் திருடர்களாலும் சூறையாடிப்பட்டு அழிவுகளைச் சந்தித்து வந்துள்ள போது கர்ப்பக்கிரகம் சிதைந்து விட்டது. அர்த்தமண்டபம்சிதைவுற்றநிலையில்பாதுகாக்கப்பட்டதுடன் மகாமண்டபமும் ஆலயக்கட்டங்களும் ஆலய அத்திவார மண்டபத்தில் புதையுண்டு காணப்படுகின்றது. இவற்றை நோக்கும் போது இங்கு ஒர் பெருங்கோயிலாக திருமங்கலாய் சிவன் அமையப்பெற்றிருந்தது என அறியமுடிகின்றது .இவ்ஆலயம் அழிவடைந்த போது இங்கிருந்த இலிங்கத்தையும் அம்பாளையும் திருவாளர் ஸ்ரீ தியாகராசா குருக்கள் என்பவர் இங்கிருந்த சைவ மக்களின் துணையுடன் எடுத்துக்கொண்டு வெருகலம் பகுதியில் சிறு கோயில் வைத்திருந்தார். பின்னர் இக் கோயில் பராமரிப்பற்றுப் போனதால் இத்திருவுருவங்கள் மூதூர் பிள்ளையார் கோயிலில் சில காலம் வைக்கப்பட்டிருந்தன. பின்னர் அடியவர் ஒருவரால் மட்டக்களப்பிற்கு வழிபட்டுக்கு எடுத்துச்செல்லப்பட்டதாக கூறுகின்றனர்.


இவ்வாறு பிரமாண்டமாக அமையப்பெற்ற திருமங்கலாய் சிவன் பல்வேறு காரணங்களால் அதன் கட்டுமானம் திருவுருவங்கள் அழிவடைந்தாலும் அவற்றினை ஆ
தியம்மன் கேணி 217/T என்ற கிராமசேவகர் பிரிநிலைக்கு உட்படுத்தி மீளவும் காடுவெட்டி அழிந்த கற்களை சரிசெய்து வழிபாடுகள் இயற்றப்பட்டு வருகின்றது.

பூசை வழிபாட்டிலும் மறைக்கப்பட்ட மறுக்கப்பட்ட திருமங்கலாயில் இன்றளவும் ஆண்டு தோறும் வைகாசி விசாகத்தில் பத்தினியம்மன் மடையும் அது தவிர வைரவர் மடையும் மக்களால் நடாத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.இறைவழிபாடுகளில் ஈடுபட்டு சென்ற நூற்றாண்டுக் காலத்திலும் பல துறவிகள் இச்சிவன் கோயிலில் வந்துள்ளதாகவும் தங்கியிருந்ததாகவும்;; அறியக்கூடியதாகவுள்ளதுடன் இவர்களில் கிளிவெட்டியைச்சேர்ந்தபசுபதிச்செட்டியார்சாமியார்ஆகியோரைகுறிப்பிட்டுக்கூறலாம்.அத்துடன;;; செல்லத்துரை இந்தியாவைச் சேர்ந்த தவத்திரு குன்றங்குடி அடிகளாரும் திருமங்கலாய் வந்துவழிபாடியற்றியதாக இப்பிராந்திய மக்கள் தெரிவிக்கின்றனர்.தொடர்ச்சியான வழிபாட்டிற்குரிய இடமாகமீண்டும் இவ்வாலயத்தை ஒரு மாற்றியமைப்பதற்கு முதற்கட்டமாக இவ்வாலய சூழல் சுத்தமாக்கப்பட்டு பின்னர் அங்கு சேதம் உற்றிருந்த பழைய ஆலயக்கட்டடத்தை செம்மைப்படுத்தி புதியதொரு சிவலிங்கம் ஒன்று நந்தியெம்பெருமானுடன் 2016.11.30ம் திகதி சமய முறைப்படி பிரதிட்டை செய்யப்பட்டதுடன் 2017.02.24 அன்று மகாசிவராத்திரி பூசைகளும் சிறப்பாக நடைபெற்றதுடன் இன்றைய சூழலில் பழமைப் போன்று ஒரு புதுப்பொலிவினைப் மக்கள்ஏற்படுத்தி இப்பிரந்தியம் முழுவதும் திருமங்கலாய் சிவனாலயத்தின் பழமையான இந்துபபண்பாட்டை பேணிவருகின்றார்கள்.

Tuesday, March 14, 2023

கிராமங்களின் வளர்ச்சிப்போக்கில் 

சனசமூகநிலையங்களின் வகிபாகம்


   

 சனசமூகநிலையம் என்பது மக்களது வாழ்வியலில்  பின்னிப்பிணைந்த ஓர் அமைப்பாக இருந்து வருகின்றது. அவ்வவிதம் பண்டைய மக்களது பண்பாடுகள் யாவும் தொன்று தொட்டு பேணப்பட்டு வருகின்றமைக்கு ஒரு உதாரணமாக இவை விளங்ககின்றன. மனிதன் வாழ்வியல் போராட்டத்தில் பல சவால்களுககு முகம் கொடுத்து கிராமம் என்ற சிறிய அலகில் இருந்து சமூகக் கட்டமைப்புகளை வளம்படுத்தி நகரமட்டத்தில் வாழும்மக்களது வாழ்வியலைக் காட்டிலும் ஒரு சுதந்திரமான இயற்கை வாழ்வு முறைகளைப்பின்பற்ற இந்த சனசமூகநிலைகள் வழிவகை செய்கின்றன.

       அந்தவகையில் 'ஊருணி நீர்நிறைந்தற்றே உலகவாம் பேரறிவாளன் திரு' என்ற  வள்ளுவப்பெருந்தகையின் வாக்கின்பதம் ஊரிலே அனைவராலும் விரும்புமாறு மக்களிற்கு உதவி செய்பவனது செல்வம் நடு ஊரினுள் நல்ல நீர் ஊற்று       அமைந்தது போன்றது என்றதன் பிரகாரம் ஓர் கிராமத்தில் அமைக்கப்பெற்ற சனசமூகநிலையங்களும் இன , மத , மொழி , பால் பேதமின்றி அவ்வூரின் வளர்ச்சிக்கான அத்திவாரமாக விளங்குகின்றன.

      பண்டைய மக்களது வாழ்வியலில் 'ஆலயங்களே அவர்களது சேவை நிலையமாக காணப்பட்டது. அவ்விதம் கல்விக்கூடங்கள் , கலைக்கூடங்கள் , படிப்பகங்கள், பிணக்குகளை தீர்க்கும் நீதிமன்றங்கள். ஆதுலர்சாலைகள் , என்றவாறு கிராமமட்டங்களில் ஆலயங்களோ பேசுபொருளாக காணப்பட்டது. காலப்போக்கில் இன்நிலமைமாறி  மக்களின் சேவை மையமாக சனசமூக நிலையங்கள்     முதன்மை பெறத்தொடங்கியது இவ்விதம் மரத்தடி நிழலில் ஒன்று கூடல்,பின்னர் மாலைப்பொழுதினை கழிப்பதற்காக ஒன்றுகூடும் போது  , அந்நேரத்தினைப் பயனுள்ளதாகப் பயன்படுத்த பத்திரிகைப்படிப்பகம் 


          என்றவாறு கொட்டகை அமைப்பு , கட்டிடஅமைப்பு என வளர்ச்சி பெற்று இன்று தன்னுள்ளே பல சேவை அமைப்புக்களை உள்ளடக்கி கிராமத்தின்    தாய்அமைப்பாக சனசமூகநிலையங்கள் உருப்பெற்றுள்ளது. அந்தவகையில் விளையாட்டுக்கழகம் , இளைஞர்கழகம் , மாதர்சங்கம் , முன்பள்ளி, சிவில்பாதுகாப்புக்குழு , சிறுவர் பாதுகாப்புக்குழு , டெங்கு கட்டுப்பாட்டுக்குழு , பொலீஸ்குழு ,கிராமமட்ட நல்லிணக்கக் குழு, சுகாதாரமேம்பாட்டுக்குழு என்ற அமைப்புக்கள் சனசமூகநிலையத்தினை மையமாகக்கொண்டு இன்று சேவை நல்கி வருகின்றமையைக் காணமுடியும். அந்த வகையில் தன்னுள்ளே தலைவர், செயலாளர் , பொருளாளர் என்ற பிரதான நிர்வாகக்கட்டமைப்பினையும் அதனைத்தொடர்ந்து நிர்வாக உறுப்பினர்கள் புடைசூழ ஒரு பலம் வாய்ந்த அமைப்பாக கிராமத்தில் அமையப்பெற்று இருப்பதுடன் பத்திரிகைப்படிப்பகம் , என்ற பகுதிகள் ஒதுக்கப்பட்டு கிராமத்தின் இளையோர் தொட்டு முதியோர் வரை இலகுவாக வருகை தந்து இயற்கையுடன் ஒட்டியவாறு இதமான அறிவினைத்தேடுவதற்கு ஏற்ற சாளரங்கள் கொண்ட ஓர் பகுதியில் அமையப்பெற்று இருக்கும் அதேபோன்று மழலைகளைக் கவர்ந்து  அவர்கட்கு கல்வியினை ஊட்டும் ஓர் அகமகிழ் கழகமான முன்பள்ளி அமைப்புக்களையும் அதனோடு சேர்ந்த விளையாட்டுப்பகுதிகளையும் கொண்டுள்ளதுடன் மாலை நேரக்கல்வி நிலையங்களாகவும் ஊரிலுள்ள இழைஞர் யுவதிகளால் மாணவர்கட்கு கல்வி புகட்ட ஏதுவாக அமைந்துள்ளது. மட்டுமல்லாது நூல்நிலையங்கள் , கணணிப்பிரிவுகள் , கற்கைகள் போன்ற கட்டமைப்புக்களும்; இந்த சனசமூகநிலையங்களை மையமாகக் கொண்டு அமைந்துள்ளது.

         மேலும் கிராமத்தில் படித்து வேலை அற்று இருக்கும் இளைஞர், யுவதிகட்கு கைத்தொழிற்பயிற்சிகளாக, பன்னைவேலைகள் , தையல் மற்றும் அழகுப்பயிர்ச்சி நெறிகள் என்பனவும் கற்பிக்கப்பட்டு எதிர்காலத்தில் சிறந்த கைவினைஞர்களாக வலம்வர இந்த சனசமூகநிலையங்கள் செல்வாக்குச் செலுத்துவதோடு இல்லாது கிராமத்தில் ஒருபுறம் அபிவிருத்தியையும் மறுபுறம் அதற்கு தடையான பிணக்குகள் , முறண்பாடுகள் என்பதனையும் கிராமமட்டத்தில் விசாரித்து அவர்களுக்கு சாதகமான முறையில் சில தீர்ப்புக்களை வழங்குவதுடனும் தன்னைப்பார்த்துக்கொள்ள கிராமமட்டத்தில் சில யாப்புக்களையும் உருவாக்கி சேவைவழங்கும் ஓர் நிலைமையாக விழங்குகின்றதுடன்  மருத்துவமுகாம்கள், இரத்ததானங்கள் , கல்விக்கௌரவிப்புகள் போன்ற சேவையும் ஆற்றுp வருகின்றது.

       இத்தகைய கிராமங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாகவிழங்கும் அமைப்புக்கள் பெரும்பான்மையானவைகள் வலுப்பெற்றுக்காணப்படுகின்ற போதிலும் ஒருசில சனசமூகநிலையங்கள் கிராமமட்டங்களில் வலு இழந்து காணப்படுகின்றது. இருப்பினும் சில புத்திஜீவிகளால் ஓரளவு அதன் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலமையானது சில இளைஞர்ககளது சமூக அக்கறையற்ற போக்குகளும் , நிர்வாகக் கட்டமைப்புக்களை தொடர்ச்சியாக ஒரு குழு ஆக்கிரமிப்புத்தன்மை , உரியகாலத்தில் மாற்றம் செய்யப்படாத நிர்வாக முறைமைகள் , ஜனநாயகம் அற்ற நிர்வாகத்தெரிவுகள் ,  உள்ளிட்ட சில செயற்பாடுகளில் நாம் மாற்றங்களை மேலும் கொண்டுவரும்போது இத்தகைய நிலையங்களில்களில் இளைஞர் யுவதிகளின் பங்களிப்புக்கள் பெருகும் என்பது காலத்தின் திர்க்கதரிசனம்.

                                             



                                            
                                             
திரு.மன்மதராசா தசிதரன்

                                              (அபிவிருத்தி உத்தியோகத்தர்

                                                            கட்டுவன் மேற்கு)


அறிவார்ந்த சமூகத்திற்கான வாசிப்பு





உள்ளங்கையளவு சுருங்கி வரும் உலகத்தில் எந்திரமாய் இயங்கி வரும் மனிதனது வாழ்வியலோட்டத்தில் 'வாசிப்பு' என்பது வாயடைத்துப் போன ஓர் நிலையினை காணமுடிகின்றது. இப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிரினங்களிலும் மனிதனுக்கு மட்டுமே உள்ள சிறப்பு ஆறு அறிவுடன் இயங்குவது தான். இதில் ஆறாம் அறிவான பகுத்தறிவிற்கே மிகவும் முக்கியத்துவம் உண்டு. காரணம் அதுவே மனிதனை இவ்வளவு தூரம் பரிணாம வளர்ச்சியடைய வைத்திருக்கின்றது என்றால் மிகையாகாது. நல்லது கெட்டது என்பதனை கேட்டல், பார்த்தல், வாசித்தல் போன்றவற்றின் அறிவு முதிர்ச்சியே மனிதப்பரிணாம வளர்ச்சியாகும்.

பண்டைய காலம் தொட்டு தற்காலம் வரை மனித சமூகத்தின் உயிர் நாடியாக 'வாசிப்பு' என்பது திகழ்ந்துள்ளது என்பதனை மறுக்கவோ மறுதலிக்கவோ முடியாத ஒன்றாகும். இதனால் தான் 'வாசிப்பதால் மனிதன் பூரணமடைகிறான்.' எனக் கூறப்படுகின்றது. இவ்விதம்


வாசிப்பானது புராதன காலத்தில் மொழி என்ற கட்டமைப்பு தோன்ற முன்பே குறியீடுகளை வாசித்து பொருள் புலர்ந்து நம் புத்திக் கூர்மையை வளம்படுத்தியமையை இன்றைய ஆய்வுகளில் கிடைக்கும் மட்பாண்டங்கள், கல்வெட்டுக்கள், நாணயங்கள் போன்றவற்றில் உள்ள குறியீடுகளைக் கொண்டு காட்ட முடிகின்றது. இத்தகைய தொடர்ச்சியான வாசிப்பானது மரத்தடி நிழல்களிலும் சனசமூக நிலையங்களிலும், பள்ளிகளிலும், பிரிவேனாக்களிலும், அறநெறிகளிலும், பிரயாணங்களிலும், சிறைச்சாலைகளிலும் மேற்கொள்ளப்பட்ட வாசிப்புப் பழக்கத்தின் விளைவே இவ் உலகம் பல அறிவியல் மேதைகளை உருவாக்கக் காரணமாக அமைந்தது.

     இவ்வாசிப்பானது மேல் எழுந்தவாரியாக வாசித்தல் 'நுனிப்புல் மேய்தல் போல்...' எனவும் ஆழமாக வாசித்தல் என இரண்டுவகைக்குள் அடக்குவர் கதை, சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல், பத்திரிகை, நகைச்சுவை, பொழுதுபோக்கு, அறிவியல், வானிடம், சோதிடம், கணிதவியல், போன்ற பல அறிவுப் பொக்கிஷங்களை வாசிப்பது தேடல், கிரகித்தல், ஆராய்தல், கற்பனை வளம் மற்றும் எழுத்துப்பிழை இன்றி எழுதும் ஆற்றல் சரியான முறையில் சொற்களின் பிரயோகம் போன்ற அறிவாற்றலை வளர்க்கும் சாதனம் ஆகும். இத்தகைய அறிவு மிக்க புத்தகங்களின் வாசிப்பானது ஆளுமை மிக்க சமுதாயத்தை கட்டியமைக்க உதவ முடியும்.

'வாளினுடைய கூர்மையும் நூலினுடைய கூர்மையும் ஓர் நாட்டை ஆளும்...' என்று கூறுவார்கள். இன்றைய கால கட்டத்தில் நூலினுடைய கூர்மைதான் உலகத்தையே ஆள்கின்றது என்றால் மிகையாகாது. இதனாலேயே மார்ட்டின் லூதர் 'துப்பாக்கியை விடவும் பயங்கரமான ஆயுதம் புத்தகங்கள்..' எனக் கூறியுள்ளார்.

இத்தகைய வாசிப்புப் பழக்கமானது ஆன்மாவைக் கூர்தீட்டும்அறிவை மெருகேற்றும் அனுபவங்களை அடுக்கடுக்காய் அணிதிரட்டி அறிவுரைகளை அள்ளித்தரும் அமுதசுரபியாக விளங்குகின்றது. புத்தகம் ஒரு சிறந்த நண்பன், அற்புதமான வழிகாட்டி. வெறும் எழுத்துக்களால் மட்டுமான காகிதங்களின் கூட்டு அல்ல. அது ஒரு ஆன்மாவின் அசரீரி, அது அமைதியாய் உறங்கும் அந்தராத்மாவை, வாசிப்பு தட்டியெழுப்பும் அறிவுரையும் அனுபவமும் அள்ளித்தரும். பொது அறிவுகளும் பொன்னான கருத்துக்களையும் பொழிந்து தள்ளும் கார்மேகமாக விளங்குகின்றது.

மனிதனை மனிதனாக வையத்தில் வாழ வைப்பதற்கு கல்வியும் அதனோடு இணைந்த வாசிப்புப் பழக்கமுமே உன்னதமாக திகழ்கின்றது இதனையே 'நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான் கற்ற நூ

லளவே ஆகுமாம் நுண்ணறிவு' என ஒளவையார் நாலடியாரில் நயந்து கூறியுள்ளமை வாசிப்பின் மகத்துவத்தினையும் கல்வியின் சிறப்பினையும் காட்டுகின்றது. மேலும்'தொட்டனைத்

தூறும் மணற்கேணி மாந்தற்கு

கற்றனைத்தூறும் அறிவு..' என்கிறார் வள்ளுவப் பெருந்தகை அதாவது மண்ணை எவ்வளவு ஆழமாக தோண்டினாலும் நீரானது சுரப்பதைப் போல் நல்ல நூ

ல்களை வாசிப்பதால் மனிதர்க்கு நல்லறிவு தோன்றும் என்பது புலப்படுகின்றது. நல்ல நூ

ல்களைப் படிக்கப் படிக்க அறிவானது வளர்கின்றது. இதனை நான் சொல்லக் காரணம் நஞ்சு கொடுக்கப்படும் வரை கிரேக்க நாட்டு நூ

ல்களைப் படித்துக் கொண்டு இருந்தவர் சாக்ரட்டீஸ். இறக்கும் தருவாயிலும் கூட வாசிப்பின் மீது கொண்ட அவரது ஆழமான அன்பு இன்னும் நிலைத்து நிற்கின்றது.

இவ்விதம் வாசிப்பின் சுவையறிந்து, நூ

ல்களின் திறன் அறிந்து, வாசித்தால் வாழ்வியலின் வெற்றியம்சங்களை உணர்ந்து மனம் திறந்து அதன் பெருமையுரைத்துக் கொள்ளலாம். பிரபஞ்ச முடிவுவரை நிலைத்து நிற்கும் பிரபலங்கள் சிலரின் அனுபவத் தொகுப்புக்கள் வாசிப்புப் பழக்கத்தை படம் பிடித்துக் காட்டுகின்றன.

'நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னை சந்திப்பவனே என் தலை சிறந்த நண்பனாவான்..' ஆப்ரகாம் லிங்கன் கூறியுள்ளார். மேலும் 'வேறு எந்த சுதந்திரமும் வேண்டாம் சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் எனக்கு அனுமதியுங்கள்' என நெல்சன்மண்டேலாவும், 'ஒரு நூ

லகம் திறக்கப்படும் போது ஊரிலுள்ள பல சிறைச்சாலைகள் மூடப்படும்..' என சுவாமி விவேகானந்தரும், 'ஆயிரம் புத்தகங்களை வாசித்தவன் ஒருவன் இருந்தால் அவனைக்காட்டுங்கள் அவனே எனது வழிகாட்டி..' என ஜூலியர்சீசரும், தான் படித்த புத்தகத்தை முடித்துவிட வேண்டும் என்பதற்காக அறுவை சிகிச்சையைத் தள்ளிப்போடச் சொன்னவர் அறிஞர் அண்ணா, படிப்பகங்களிற்கு அருகில் உறங்கும் இடத்தைக் கேட்டார் அம்பேத்கர். 33 ஆண்டுகள் நூ

லகத்தில் மூழ்கி 'மூலதனம்' எனும் கம்னீனச சித்தாந்தத்தை கண்டுபிடித்தார் கார்ல்மார்க்ஸ். இத்தகைய அறிஞர்கள் வாசிப்பதற்கு முதன்மை  கொடுத்துள்ளார்கள் என்றால் வாசிப்பு அந்தளவிற்கு அவர்களது வாழ்க்கைக்கு நிறைய பாடங்களைக் கற்றுத்தந்துள்ளது. கம்பனுடைய ஒரு செய்யுள், பாரதியினுடைய ஒரு பாட்டு ஏன் கண்ணதாசனுடைய ஒரு வரி நம்முடைய வாழ்க்கையையே புரட்டிப் போட்டுவிடும். இதுவே வாசிப்பினுடைய மகத்துவமும். ஒருவரி பல அர்த்தங்களையும் அனுபவங்களையும் பெற்றுத்தருகின்றது.


இத்தகைய மகத்தான வாசிப்புப் பழக்கமானது இன்றைய நவீன உலகில் சமூக வலைத்தளங்களின் அதிகரித்த பாவனை வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கின்ற போதிலும் சாணேற முழம் சறுக்கிய கதையாய் அதில் உள்ள ஏனைய பல அம்சங்கள், இலத்திரனியல் விளையாட்டுக்கள், நண்பர்கள் மற்றும் புதியவர்களுடனான அரட்டைகள், முகநூ

ல் பாவனை, கட்டணமின்றிய தொலைபேசி வசதிகள் போன்றன பொன்னான நேரத்தை விரயமாக்கி வாசிக்கும் பழக்கத்தை கணிசமான அளவிற்கு குறைத்துவிட்டன என்பதும் கசப்பான உண்மையே!

இத்தகைய நிலைமை மாறவேண்டும். மாணவர்கள் பாடப்புத்தகத்தைத் தாண்டியும் வாசிப்புப் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். இது பெற்றோர்களது தலையாய கடமையாகும் அதாவது 

'வா வாசிக்கலாம் என்கிறது புத்தகம்.. 

வா சிக்கலாம் என்கிறது சமூகவலைத்தளம்..' இதனைத்தாண்டியும் பிள்ளைகளிடம் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது உலக நியதியாகும். இதனால் தான் குழந்தை கருவில் இருக்கும் போதே தாய் வாசிக்க வேண்டும் என்று சொல்லப்படுகின்றது.

எனவே நாட்டில் வாசிப்புப் பழக்கத்தை உருவாக்கும் நோக்கத்திற்காக 2004ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதன் முதலாக இலங்கை கலாசார அமைச்சின் நிர்வாகத்தின் கீழ்த் தேசிய நூ

லகம் மற்றும் ஆவணவாக்கல் தேசிய சபையினால்

National Library and Documentation Service Board) ;   தேசிய வாசிப்பு மாதமாக பிரகடனப் படுத்தப்பட்டு நலிவடைந்த வாசிப்பை மீள புத்துயிர் ஊட்டும் வகையில் ஒக்டோபர் மாதத்தில் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்பக் கல்லூரிகள், பிரிவேனாக்கள், கிறிஸ்தவ மிஷநெறிகள், ஆலய அறநெறிகளில் வாசிப்புத் தொடர்பாக பல ஆக்க
பூர்வமான நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எடுத்துக்காட்டாக அண்மைக் காலங்களில் வட பகுதியில் அமைந்துள்ள நூலகங்கள் தனக்கென ஓர் தனித்துவமான சிறப்பியல்புகளைக் கொண்டு

விரிந்து கிடக்கும் பிரபஞ்சத்தில் சரிந்து கிடக்கும் வாசிப்பானது நிமிர்ந்து நின்று மேன்மையடைய வாசிப்புப் பழக்கம் நிலைபெற வேண்டும். இல்லையேல் காலம் முழுவதும் உடல் உழைப்பை நம்பி, மாடாய் உழைத்து, ஓடாய்த் தேய்ந்து, போவதனைத் தவிர வேறு வழியில்லை. அதற்காகவாவது படிக்க வேண்டும். மாணவ சமூகங்களே ஒன்றைமட்டும் புரிந்து கொள்ளுங்கள்! பணக்காரர்களின் மாளிகையில் பிறக்கும் குழந்தைகளின் கால்களைத் தாங்குவதற்கு பல தோள்கள் உள்ளன. ஆனால் ஏழைகளின் குடிசையில் பிறக்கும் குழந்தைகளின் தோள்களிற்கு சுமைகள் மட்டுமே காத்திருக்கின்றன. பணக்கார வீட்டில் பிள்ளைகள் வளர்ந்து பிறக்கின்றார்கள்É ஏழைவீட்டில் பிள்ளைகள் பிறந்து வளர்கிறார்கள். வளர்ந்து பிறப்பது வாரிசு உரிமை, பிறந்து வளர்வது பிறப்பின் உரிமை. அதற்காகவாவது படிக்க வேண்டும். அதற்கு வாசிப்பு வேண்டும். வாசிப்போம்É நல்ல நூல்களை நேசிப்போம்É வாழ்க்கையை யாசிப்போம்.


மன்மதராசா தசிதரன்.

அபிவிருத்தி உத்தியோகத்தர்,


 


  கிழக்கிலங்கையின் தொன்மையை பறைசாற்றும்                         திருமங்கலாய் -சிவனாலம். கள ஆய்வுத்தொகுப்பு   கிழக்கிலங்கையில் திருகோணம...