Wednesday, July 5, 2017

இந்தியக் கலை மரபின் நோக்கங்களும் இயல்புகளும்


இந்தியக் கலை மரபானது தென்னாசியாவில் தனித்துவம் மிக்கதாகவும் பொதுமையான இயல்புகளைத் தன்னகத்தே கொண்டு விளங்குவதாகவும் காணப்படுகின்றது. அங்கு அது மக்கள் வாழ்வினையும், மத அனுட்டான முறைகளையும் ஒருங்கே இணைக்கின்ற வகையில் வளர்ச்சி பெற்றுச் சென்றதன் அடிப்படையில் கலையுலகில் தனக்கெனத் தனித்துவமான ஓர் இடத்தினைத் தென்னாசியக் கலை மரபுகள் பெற்றுவிட்ட தெனலாம்.

எனவே இவ்வாறான தனித்துவம் வாய்ந்த கலையின் இயல்புகளையும் அவற்றின் நோக்கங்னளையும் ஆராய்வதற்கு முன்னர் 'கலை' என்றால் என்ன என்பது பற்றி முதலில் தெரிந்து கொள்வது மிகப் பொருத்தமானதாகும்.
கலை எனப்படுவது செயல் என்ற வினையின் (யுசவ யனெ யுஉவழைn)அடியாகத் தோற்றம் பெற்றுது எனக் கலை நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். ஆனால் இக் கலை நிபுணர்கள் 'கலை' என்றால் என்ன என்பதற்கு கொடுக்கும் விளக்கங்கள் காலத்திற்கு காலம், இடத்திற்கு இடம் வேறுபட்டதாக அமைந்து விடுகின்றது. எது எவ்வாறு அமையினும் 'கலை' என்பது ஒரு வெளிப்பாடே என்பது தான் பொதுமையான கோட்பாடாகும்.
கலை என்பது ஜீவனோபாயத்தின் வெளிப்பாடு என வானமாமலை என்ற அறிஞர் எடுத்துக் காட்டுகின்றார். இவர் கலைகளின் தோற்றம் தொடர்பாக விளக்குகையில், மனிதன் கற் காலத்தில் இருந்தே கலைகளில் ஈடுபட்டு வந்தான் எனக் குறிப்பிடுகின்றார். மனிதன் நாள் முழுவதுமே தனது உணவுத் தேவையை நிறைவு செய்வதற்காக சில யுக்திகளைக் கையாளவேண்டி நிர்ப்பந்திக்கப்பட்டான். அதனால் அவன் கருவிகளைப் பயன்னடுத்தத் தொடங்கிய காலம் முதல் அக் கருவிகளானது நிறைவான உபயோகத்தின் பயன்பாட்டிற்காக அவற்றைச் செப்பனிட ஆரம்பித்தான். பின்னர் அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பாக தனது வதிவிடத்தில் பரீட்சித்துப் பார்த்ததின் பின்னணியிலேயே கலைகள் தோற்றம் பெற்றிருக்கலாம் என ஊகிக்னப்படுகிறது. வட ஸ்பெனியில் உள்ள அல்மிரா குகை ஓவியங்களும் இவ் வழியே உருவானவையாகும் என்பது அறிஞர்களது கருத்தாகும். வானமாமலை என்பவர் கலைகளின் தோற்றத்திற்கும் ஜீவனோபாயத்திற்கும் இடையே இருந்திருக்கக்கூடிய நெருங்கிய தொடர்பு முறைக்கு உதாரணமாக இதனை ஆணித்தரமாக எடுத்துக் காட்டுகின்றார்.

Indian-sculpture



ஆனால் கலை என்பது அழகியல் உணர்வின் அடிப்படையில் தோற்றம் பெற்றது என அழகியல் கலை பற்றி ஆராய்ந்த அறிஞர்கள் குறிப்பிடுகின்றர். அழகியல் உணர்வின் வயப்பட்ட நிலையில் கலைகள் தோற்றம் பெறுவதற்கு ஓய்வு நேரம் அவசியமானதென்பது குறிப்பிடக்கூடிய ஒரு விடயமல்ல. உற்பத்தி ஒழுங்குகள் நெறிப்படுத்தப்பட்ட காலத்திலே மனிதன் ஓய்வு நேரத்தை அனுபவிக்கத் தொடங்கினான். மிகை உற்பத்தியானது கலை வெளிப்பாட்டினை ஒரு சிறப்புத்தேர்ச்சிக்குரிய அங்கமாக மாற்றியமைத்தது. புராதன நதிக்கரையோர நாகரிகங்களில் கணிதம், விஞ்ஞானம், தத்துவம், இலக்கியம் என்பன எவ்வாறு சிறப்புத் தேர்சிசியாளர்களின் பங்களிபடபாக அமைந்ததோ அவ்வாறே கலைகளின் வெளிப்பாடும் சிறப்புத் தேர்ச்சியாளர்களின் கைவண்ணத்தினால் உருவாக்கப்பட்டதாக அமைந்தது எனலாம். இது அழகியல் என்ற அடிப்படையில் ஓய்வு நேர கால சிறப்புத் தேர்ச்சியாக தோற்றம் பெற்றது என்றால் அதிலும் தவறு இருக்க முடியாது.
எது எவ்வாறு இருந்த போதிலும் அழகியல் அடிப்படையிலான கலை உணர்வு ஐரோப்பாவில் 15ம், 16ம், 17ம் நூற்றாண்டுகளில் பெருவளர்ச்சியடைந்தது என்பதனை மறுக்க முடியாது. மறுமலர்ச்சிக்கால ஐரோப்பாவில் அழகியல் உணர்வினால் உந்தப்பட்ட நிலையில் பிரபுக்களும், செல்வந்தர்களும் பாரம்பரியக் கலை அம்சங்களை உருவாக்கியளித்த உரோமானியக் கலைப் படைப்புக்களில் நாட்டம் கொண்டு அவற்றை வெறும் அழகியல் உணர்வின் அடிப்படையில் சேகரித்து வைக்கின்ற முயற்சியில் ஈடுபட்டடிருந்தனர். விருந்தினர் தங்குகின்ற விடுதிகளிலும், வரவேற்பறைகளிலும் இத்தகைய கலைக் கரூவூலங்கள் அழகியல் நோக்கத்திற்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
Ajanta_Caves
 எனவே அழகியல் அடிப்படையூடான கலைப் படைப்புக்கள் பற்றிய சிந்தனைகளின் வெளிப்பாடாக ஐரோப்பாவின் மறுமலர்ச்சிக் காலம் அமைந்தது என்றால் மிகையில்லை.
கலை, வருவாயை ஈட்டித் தருவதாக இப்போது கருதப்படுகிறது. இதனையே ஐவெநச யுசவ என்ற பதம் குறித்து நிற்கின்றது. ஒரே மாதிரியான கலைப் படைப்புக்கள் தொழில் நுட்ப வளர்ச்சியின் பின்னணியில் (ஐனெரளவசயைட யுச) உருவாக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுவதனை இப்போது காணலாம். இத்தைகைய கலைப் படைப்புக்கள் எந்தளவிற்கு அந்நாட்டினுடைய பண்பாட்டினை பிரதிபலித்து நிற்கின்றது என்பது கேள்விக்குரியதே. இருந்தாலும் கலை வெளிப்பாட்டினைப் பொறுத்தவரை அவை மனித சிந்தனையை வெளிப்படுத்தி நிற்பதன் அடிப்படையில் முதன்மை பெநுகின்றதெனலாம். எனவே சிந்தனைக்கு வடிவம் கொடுப்பது கலை என்பது விஷேடமாக இந்தியக் கலை வரலாற்றுக்கு முற்றிலும் பொருந்துவதாகின்றது.


இந்தியக் கலைகள்  மேல்நாட்டுக் கலைகளைப் போன்றதல்ல. பேரின்ப நெறிக்குச் சாதனமாகவே பெரும்பாலும் கலைகள் கையாளப்பட்டு வந்தன. கலையைக் கலைக்காக (யுசவகழச யுசவ ளுயமந) வளர்க்கும் நோக்கம் இருந்ததில்லை. சிற்பம், ஓவியம், இசை என்பன ஆத்மீக வாழ்வைப் பெறுவதற்காகவே உபயோகிக்கப்பட்டன. எனவே இந் நோக்கங்களை ஆதாரமாகக் கொண்டு விளங்கும் கலைகளுக்கும், உலக வாழ்க்கையில் ஏற்படக்கூடிய சிற்றின்ப நுகர்ச்சிகளைப் பெறுவதற்குச் சாதனமாகப் பயன்படுத்தப்படும் கலைகளுக்கும் இடையில் வேறுபாடு காணப்படுவது இயல்பு ஆகும்.
இயற்கைப் பொருட்கள் கண்ணிற்கு எவ்விதம் தோன்றுகின்றனவோ அவ்விதம் தோன்றுகின்றனவோ அவ்விதமே அவற்றினைப் புனைவது தான் மேல் நாட்டுக் கலையின் நேக்கமாகும். இது ஆங்கித்தில் சுநயடளைஅ (பிரகிருதிவாதம்) எனக் கூறப்படும். ஆனால் இந்தியக் கலைகள் இதற்கு மாறுபட்ட நோக்கத்தைக் கொண்டுள்ளன. இயற்கைப் பொருட்களை பார்ப்பவர் மனத்தில் 'கலை இன்பத்தினை' எழுப்பக்கூடிய விதத்தில் திரிவு பண்ணி அமைத்தலே இந்தியக் கலையின் நோக்கமாகும். 'கலை இன்பமாவது' காவியம், சிற்பம், ஓவியம், இசை என்ற இக் கலைகளின் வாயிலாகத் தூய நிலையின் கண்ணே எழுகின்ற இன்பமாகும். இவ்விதம் பொருட்களை அமைத்தல் னைநயடளைஅ (குறிக்கோள்வாதம்) எனக் கூறப்படுகின்றது. இக்கருத்துக்களை டாக்டர் முல்க்ராஜ் அநந்தர் என்பவர் நயமாக விளக்குகையில், 'இந்தியக் கலைகளின் கண்ணே மாறுதலடையாத ஒரு சமய நோக்கம் உண்டு. மனித வாழ்க்கையின் எல்லாத் தன்மைகளுக்கும் தெய்வீகக் கருத்தே கொள்ளப்படுகின்றது. கலைப் பொருட்களுக்காக காட்டப்படும் உருவங்கள், மரங்கள், மலர்கள், பறவைகள் என்பன யாவும் இயற்கையில் இருந்தே எடுக்கப்பட்டனவாயினும் அவை விண்ணுலக வாழ்வின் இயல்பினைக் காட்டுந் தன்மையுள்ளனவாக அமைக்கப்படுகின்றன. ஓவியத்திலாயினும், சிலையுருவிலாயினும், மட்குடத்திலாயினும் பொறிக்கப்படும் சிறிய ஒரு சித்திரந்தானும் மனிதன் கடவுளை எப் பொருளினுங் காண்கினறான் என்னும் உண்மையை விறங்குவதுமின்றி, கடவுள் எல்லாப் பொருள்களுக்கும் ஒரு தெய்வீக இயல்பினை அளித்திருக்கின்றான் என்பதனையும் மனிதனுக்கு விளக்குவதாகின்றது. இந்தியக் கலையானது எல்லாப் பொருள்களையும் பேரின்ப உணர்ச்சியோடு நோக்குகின்றமையால் அதன் கண்ணே ஐரோப்பியராற் கொள்ளப்படும் பிரகிருதிவாதத்திற்கு இடமேயில்லை' எனக் குறிப்பிடுகின்றார்.
'ஐரோப்பியக் கலையானது இறகுகள் கத்தரிக்கப் பெற்ற பட்சியைப் போல் மேலெழாது நிலப்பரப்பிலுள்ள அழகினை மாத்திரமே அறிகின்றது. இந்த வகையில் ஐரோப்பிய சிற்பம், ஓவியம் முதலியன இயற்கையின் வெளிப்புறத் தோற்ற அமைப்பையும், அழகையும் உருவகப்படுத்திக் காட்டுவதையே தமது நோக்கமாகக் கொண்டுள்ளன. ஆனால் இந்தியக் கலையோவெனில் பிரபஞ்சாதீவு உச்சியுட் புகுந்து, மனம் வாக்கிற்கு எட்டாத உண்மைப் பொருளின் அழகை நிலவுலகிற்கு இழுக்கப் பிரயத்தனப்படுத்துகின்றது' எனக் 'ஹவல்' எனும் கலைப் புலவர் குறிப்பிடுகின்றார்.
இவ் வகையில் ஐரோப்பியக் கலையில் நோக்கத்தினின்றும் முற்றிலும் மாறுபாடு கொண்டமைந்த இந்தியக் கலைகள் தமக்கெனத் தனித்துவமான குண இயல்புகளையும் கொண்டுள்ளன. இந்த வகையில் இந்தியக் கலை மரபைப் பொறுத்த வரை கலைஞனானவன் சாதாரணமான ஒரு புகைப்படக் கலைஞனைப் போன்று இயற்கையை அப்படியே படம் பிடித்துக் காட்டியுள்ளான் எனக் கூற முடியாது. ஆனால் புகைப்படக் கலைஞனைப் போன்று இயற்கையிலுள்ள பொருட்களை அவ்வாறே சித்தரிப்பது ஒரு கலைப்படைப்பும் ஆகிவிட முடியாது. எனவே தான் இந்தியக் கலைஞனானவன் இயற்கையைத் தனது கலைப்படைப்புக்குத் துணை மூலங்களாகப் பயன்படுத்தியிருந்தமையினைக் காண முடிகின்றது.
இந்தியக் கலைஞன் தனது கலைப்படைப்பின் பிரதான பொருளாக இயற்கையை என்றுமே கொண்டதில்லை. பெருமளவிற்கு குறியீடுகளையே அவன் தனது கலைப் படைப்பில் கொண்டிருந்தான். இதனால் புராதன இந்தியக் கலைப் படைப்புக்களில் குறியீடுகள் இன்றியமையாத அம்சமாக விளங்குகின்றன. இக்குறியீடுகளானவை கலைஞன் தான் உணர்ந்த வந்த பொருளை நேரடியாக உணர்த்தாமல் மறைமுகமாக உணர்த்துவதற்கு வகை செய்ததன் அடிப்படையில் ஒரு வகையான கற்பித நோக்கிலமைந்த கலை வெளிப்பாடுகளை கலைஞன் வெளிப்படுத்தி நின்றமையைக் காணலாம். இவ்வாறு கற்பித்த நோக்கில் அமைந்த கலை முழுவதும் விரவி வருகின்ற ஒரு பொதுமையான அம்சம் ஆன்மீக விடுதலை என்பதாகும். இத் தன்மையானது பௌத்த, சமண, அஜீவக மதப் பிரிவுகளுக்கெல்லாம் பொதுமையாக அமைந்து விடுகின்றது.
இந்திய மரபில் வாழ்க்கைத் தத்துவம், கலை, சமயம் ஆகியவற்றை தனித்துவப்படுத்தி உணர முடியாத இணைவுத் தன்மைதான் இந்தியக் கலைக்கோ, இந்திய வாழ்க்கைக்கோ, இந்திய தத்துவத்திற்கோ, இந்திய சமயத்திற்கோ உள்ள முழுமைத் தன்மையாகும். இதன் உள்ளார்ந்த சிறப்பைத் தான் பொதுவாக 'இந்தியம்' எனக் குறிப்பிடப்படுகின்றது. எனவே இந்த வகையில் தான் இந்தியக் கலை என்பது வாழ்க்கையில் இருந்து பிரித்துப் பார்க்க முடியாத வாழ்க்கை நடைமுறையைக் கலையாக, ஓர் இனத்தின் வெளிப்பாடாக, தனித்துவமானதுமான பண்புகளைக் கொண்டவாறு பரிணமித்துள்ளது.
இந்தியாவில் ஓர் இனத்தின் அனுபவத்தை வெளிப்படுத்தும் பொருளாக கலை அமைகிறது. அந்த வகையில் நாம் நாள் தோறும் உண்ணும் உணவுப் பொருட்கள் வாழ்கடகையின் முக்கிய தேவையாக அமைகின்றது போன்று அத்தேவையின் பிரதிபலனாகக் கலை ஆக்கப்பட்டு விடுகின்றது. இந்த வகையில் ஐரோப்பியக் கலை மரபினின்றும் இந்தியக் கலையின் தோற்றம், சூழல் என்பன முற்று முழுவதுமாக மாற்றமுற்றிருந்ததனைக் காணலாம்.
தற்கால இந்தியாவில் கலை எனும் போது அது ஓர் இனத்தின் வெளிப்பாடாக அமைந்ததினால் எந்தக் கலை வெளிப்பாட்டினையும் விளங்கிக் கொள்வதற்கு தனித்தனி மனிதனது கலையறிவு அவசியமாகின்றது. இங்கு எந்த ஒரு கலை வெளிப்பாடும் போதனைத் தன்மையில் தங்கியிருப்பதுமில்லை. இந்த ரீதியில் தற்காலத்து கலை பற்றிய கலைப்படைப்பை பற்றி புரிந்து கொள்வதற்கு பொதுவாக அது ஆக்கப்பட்ட காலத்திலும், இடத்திலும் வாழ்ந்தோருடைய அனுபவங்களை விளங்கிக்கொள்ள வேண்டும். குரு சீட முறைப்படி தொழில் முறைகளைக் கற்றுக் கலைப்படைப்புக்களைச் செய்வதனைத் தம் வாழ்க்கைத் தொழிலாக கொண்ட கைவினைத்திறன் படைத்தோரால் தான் இந்தியக் கலை வேலைப்பாடுகளும், ஆக்கங்களும் உருவாக்கப்பட்டன. ஆனால் இங்கு தனித்துவமும், புதுமையும் முன்னரே திட்டமிடப்பட்டு சேர்த்துக்கொள்ளப்பட்ட பண்புகளாக அமையவில்லை. புராதன இந்தியாவில் ஒரு காலத்துக்கு கலை மரபில் இருந்து இன்னொரு காலத்துக்கு கலை மரபையும் வேறுபடுத்திக்காட்டும் வடிவ மாற்றங்கள் அவ்வக் கலையினுடைய சமய தத்துவக் கருத்துக்களையும், எழுச்சிகளையும், வளர்ச்சிகளையும் பிரதிபலிப்பனவே தவிர அவை கலைஞருடைய சிறப்பியல்புகளின் விளைவு ஆகாது. இந்தியக் கலை மரபில் ஒவ்வொரு கால கட்டத்திற்குமான தரத்தில் காணப்படும் மாற்றங்கள் அவ்வக்கால கட்ட மக்களினது இயல்பான இன, மனோபாங்கு, வீரியம், ரசணை சம்பந்தமான மாற்றங்களையே பிரதிபலிக்கின்றது.







தத்துவ ஞானிகள் அல்லாத பிறர் எவருமே அழகியற் கோட்பாட்டை ஆராயாத இந்தியாவில் சிற்பம், ஓவியம் போன்ற கலைகள் எல்லா மக்களும் இடம் பெற்ற அன்றாட சூழலிலே ஏற்றுக்கொள்ளப்பட்ட இன்றியமையாத பண்பாக விளங்கியதினாற்றான் கலாயோகி ஆனந்த குமாரசுவாமி அவர்கள் இந்தியக் கலை மரபானது இன்றும் வாழ்க்கையினின்றும் பிரிக்க முடியாதளவிற்கு வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்துள்ளது எனக் குறிப்பிடுகின்றார். ஆனால் இன்று ஆக்கப்படும் இந்தியக் கலை வடிவங்களுள் பெரும்பாலானவை குரு சீட முறைகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் பிராந்திய இன, குண – வம்ச ரீதியான குணவியல்புகளை உடையதாக காணவும் முடிகின்றது.






உசாத்துணை நூல்கள்
1. தென்னிந்திய சிற்பக்கலை நிபுணர்கள் - க.நவரத்தினம்
2. சிவானந்த நடனம் - ஆனந்தகுமாரசுவாமி
3. இலங்கையிற் கலை வளர்ச்சி - க.நவரத்தினம்
4. இந்தியக்கலைக்கோர் அறிமுகம் - கலையோகி ஆனந்தகுமாரசுவாமி
5. இந்தியப் பண்பாட்டு வரலாறு - N.சுப்பிரமணியம

No comments:

Post a Comment

  கிழக்கிலங்கையின் தொன்மையை பறைசாற்றும்                         திருமங்கலாய் -சிவனாலம். கள ஆய்வுத்தொகுப்பு   கிழக்கிலங்கையில் திருகோணம...