Wednesday, July 5, 2017

சிந்து வெளி நாகரீகம்



தென்னாசியாவில் முன் தோன்றிய நாகரிகத்தின் வரிசையில் இந்து நதிப் பள்ளத்தாக்கின் இரு மருங்கிலும் தோன்றிய சிந்து வெளி நாகரிகம் மிகவும் பழமையானது. இன்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தனிசிறந்த நாகரிகமாக விளங்கியது என்பதை தொல் பொருளாய்வுகள் எடுத்துக் காட்டுகின்றன. இந் நாகரிகத்தின் தோற்றம் பற்றிப் பொதுவாக பல கருத்துக்கள் கூறப்படினும் கி.மு. 3250க்கும் - 2750க்கும் இடைப்பட்ட காலப்பகுதியாக இருக்கலாம் என தொல் பொருளியலாளரான சேர்.ஜோன்.மார்ஷல் கூறுகின்றார். இக் கருத்தினை பொதுவாக வரலாற்றாய்வாளர்கள் ஏற்றுக் கொள்கின்றனர். சேர்.ஜோன்.மார்ஷல் இந் நாகரிகத்தின் தோற்றம் வளர்ச்சி  வீழ்ச்சி நிலை பற்றி அறிவதற்கு அங்கு கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட் சின்னங்களே கிடைக்கின்றன எனக் கூறுகின்றார். மற்றைய நாகரிகங்களுடன் ஒப்பிடும் போது அங்கு காணப்படும் இலக்கியச் சான்றுகளோ பிற எழுத்து மூலமான சான்றுகளோ இங்கு காணப்படாமை குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தொல் பொருளாய்வாளர்கள் எடுத்துக் காட்டப்படும் சான்றுகளோ இந் நாகரீகம் பற்றி அறிவதற்கான மூலாதாரங்களாக விளங்குகின்றன என்பது நோக்கத்தக்கது.
sinthuvely




இந்நதிப் பள்ளத்பள்ளத்தாக்கின் நகர்களான ரவி நதி ஆற்றங்கரையின் அருகில் இருந்த ஹரப்பா நகரமும் இந்து நதியின் ஓரத்தின் மொகஞ்சதாரோ நகரமும் காணப்படுகின்றன. இவ்விரு நகர்களும் ஒன்றிய ஓர் அரசாங்கத்தின் வடக்கு தெற்காக அமைந்த இரட்டைத் தலைநகர்களாக விளங்கியிருக்கலாம்.
இவ்விரு நகர்களும் இன்றைய சிந்து பலூஸ்சிஸ்தானம் பஞ்சாப் இராஜபுதனம் சௌராஷ்டிரம் முதலிய இடங்களில் 1000மைல் நீளமும் 400மைல் அகலமுமாக பரப்பளவில் பரம்பி இருந்தது எனத் தொல்வியல் ஆய்வாளர்கள் தாம் அகழ்ந்தெடுத்த தொல் பொருட்கள் மூலமும் வெளிப்படுத்தியுள்ளார்கள்.        
இந்நகர்களின் வீதி அமைப்பு முறையானது நேராக ஒரே சீராக அமைக்கப்பட்டுள்ளமையை நோக்கும் போது இங்கு நாகரீகமடைந்த மக்கள் வாழ்ந்திருக்க வேண்டும் என்பதனை உணர்த்தி நிற்கிறது. இந் நகர்களின் கட்டட அமைப்பு முறையும் அவர்களது மேம்பட்ட உயர்வு நிலையை எடுத்துக் காட்டுகின்றது.
இந் நாகரீகத்தினை தோற்றுவித்த மக்கள் யார்? என்பதில் பல்வேறுபட்ட கருத்துக்கள் காணப்பட்ட போதிலும் இதுவரை எல்லோரும் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் கருத்துக் கூறப்படவில்லையாயினும் நாகரிக மக்கள் மொசப்பத்தேமியாவில் இருந்து வந்திருக்கலாமென வீலர் கூறுகின்றார். தென்னாட்டு மொழியை ஒத்த திராவிட மக்களே இந் நாகரிகத்தவர்கள் என ஹெரஸ் பாதிரியார் கூறுகிறார். ஏனெனில் திராவிட பசுபதீஸ்வரனைக் குறிக்கும் இலச்சினை இங்கு கண்டெடுக்கப்பட்ட மூன்று முகங்களையுடைய உருவத்துடன் ஒப்பிடப்படுகின்றது. மேலும் நடராஜ வடிவம் திராவிட நாகரிகத்திற்கு உரியது. அதனையும் இந்நாகரிகத்தின் முத்திரைகளில் காணமுடிகிறது. ஆகவே இந் நாகரீக10 மக்கள் திராவிடர் என்ற கருத்தும் நிலவுகிறது. ஏனெனில் இந்நாகரீகத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தவர்களாக கருதப்படும் ஆசிரியர்கள் இந்நாட்டிற்குள் புகும் போது செழிப்பான பகுதிகளில் திராவிடர்கள் வாழ்ந்தார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. ஆகவே ஆசிரியர்களது காலம் கி.மு.2;000 முதல் கி.மு.600 வரைக்குட்பட்டதாகும். அதற்கு முன்னரே செழிப்பான பள்ளத்தாக்குகளில் சிந்துவெளி மக்கள் வாழ்ந்திருக்க வேண்டுமென்பது தெளிவாகுகிறது.
இந்நாகரிக மக்கள் கொண்டிருந்த வணிக உறவுகளும் ஆரிய நாகரீகங்கத்திற்கு முற்பட்டதாகவே காணப்படுகிறது. சுமேரியாவில் பழக்கத்திலிருந்த மட்பாண்ட வகைகள், கத்தி, கோடரி, ஈட்டி போன்ற கருவிகளுடன் இந்நாகரீக மக்கள் பயன்படுத்திய கருவிகளும் ஒத்துக் காணப்படுகின்றன. முக்ரோன் கடலோரத்திலமைந்த சுக்த ஜோன்டார் வணிகரின் அரண் செய்யப்பட்ட இடமாக விளங்கியது. ஹரப்பா அரசிற்கும் சுமார் அக்கட் ஆகிய அரசுகளுக்கும் நீண்ட காலமாக வணிக உறவு இருந்தது. மோசப்பத்தேமியாவில் காணப்பட்ட உலோகக் கருவிகள் இங்கு காணப்படவில்லையாயினும் இந்நாகரீக மக்கள் செம்பு, வெள்ளி, வெண்கலம் போன்றவற்றால் செய்யப்பட்ட கருவிகளை உபயோகித்தனர், இம் மக்கள் இரும்பு பற்றி அறிந்திருக்கவில்லை. இம் மக்கள் கொண்டிருந்த வணிக உறவும் பயன்படுத்திய கருவிகளும் அந்நாகரீகத்தின் செழிப்பினை ஏடுத்துக் காட்டுகின்றது.
இவ்வாறு வளர்ச்சி பெற்ற சமூகம் கி.மு.2000 - கி.மு.600 காலப்பகுதிகளில் மத்திய ஆசியாவில் இருந்து, கைபர்காணவாயின் ஊடாக வருகை தந்த அந்நியர்களான ஆரியர்களினால் தளர்ச்சி நிலை அடைவதைக் காண இவ்வின மக்கள் தங்களால் வெற்றி கொள்ளப்பட்ட மக்களைத் தாசர்கள் என அழைத்தனர். இம்மக்கள் பயன்படுத்தும் ஆயுதங்கள் வெண்கலத்தாலும், இரும்பினாலும் செய்யப்பட்டது.
இவ்வாறு மேன்மையுற்று விளங்கிய சிந்துவெளி நாகரிகம் எவ்வாறு வீழ்ச்சி நிலையை எய்தியது என்பதை நோக்குவோம். இந்நாகரிகத்தின் வீழ்ச்சிக்குரிய காரணிகள் பலவாறாக எடுத்துக் காட்டப்படுகின்றன. அண்மைக்காலம் வரை தொடரப்பட்டு வந்த தொல்லியல் அகழ்வாய்வின் விளைவாக அதன் வீழ்ச்சி தொடர்பான பலபுதிய கருத்துக்கள் முன்வைக்கப்பட்டமையைக் காணலாம். சிந்துவெளி நாகரிக வீழ்ச்சிக்கு இரு காரணிகள் அடிப்படையாக உதவியுள்ளதாக வரலாற்று அறிஞர்களால் எடுத்துக் காட்டப்படுகின்றது. அவையாவன ஒன்று நீண்ட காலக் காரணிகள், இரண்டு உடனடிக்காரணிகள் என்பனவாகும். இவ்விரு அடிப்படைக் காரணிகளை மையமாகக் கொண்டு சிந்துவெளி வீழ்ச்சிக்குரிய காரணிகளை ஆராய்வோம்.
garappa
இந்து நதிப்போக்கில் ஏற்பட்ட சடுதியான மாற்றம் இந்நாகரிக மக்களை இடம்பெயர வைத்தது. ஆண்டு தோறும் இடம் பெறும் இந்து நதிப்பெருக்கு, பெருக்கு புலத்தை விரிவாக்கி அதனோடு நிலத்தின் நீர்மட்டத்தையும் உயர்த்தி விடுகிறது. இதன் காரணமாக மக்கள் சிறிதளவு சோர்வுற்றிருக்கலாம். எனவே இந்நாகரிகத்தை விடுத்து வேறு இடம் செல்ல நினைத்திருக்கலாம். இந்நிகழ்வினை வரலாற்று ஆசிரியர் ஒருவர் முற்றாகவே மறுக்கிறார். 7 தடவைகள் வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட போதும் அழிந்து போகாத சிந்துவெளி நாகரிகம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது அழிந்து போனது என்பது பொருத்தமற்றதெனக் கூறுகிறார் சவால் ஏற்புக் கோட்பாட்டினை நிறுவியவரான யுசழெடன வுழலnடிநந இன் கருத் துடன் ஒப்பிடும் போது இந்நாகரிகத்தில் அடிக்கடி ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு இந்நாகரிக மக்களை அச்சவாலை எதிர் கொள்ளவும் வாழ்வின் முன்னேற்றத்திற்கும் அடிப்படையை இட்டுக் கொடுத்தலும் அவரது வாதத்தின்படி 'ஒரு முறை' மட்டும் பெருக்கெடுக்கும் நதிக்கரையோரத்திலேயே நாகரிகம் தோற்றம் பெறும் என்பதற்கிணங்க அடிக்கடி பெருக்கெடுத்த சிந்துவெளி நாகரிகம் வீழ்ச்சி எய்துவதற்கு வழியிட்டு கொடுத்திருக்கலாம்.

கோடிக்கணக்கான சுட்டசெங்கற்கள் மொகஞ்சதாரோவைக் கட்டவும், மீளமீளக் கட்டவும் தேவையாயிருந்தன. இவற்றைச் சூழையில் இட்டுச்சுடக் கோடிக்கணக்காண தென்நிறை கொண்ட விறகுகள் தேவைப்பட்டன. இவ்விறகுத் தேவையை பூர்த்தி செய்வதற்காக சூழவிருந்த காடுகள் பெருமளவில் அழிக்கப்பட்டிருத்தல் வேண்டும். இது ஓரளவு பயிர் செய்யப்படுவதற்கு பயன்பட்டு இருந்தாலும் ஈரப்பதன் மேற்செல்வதைத் தடுத்து மழைவீழ்ச்சியைக் குறைத்திருக்கும். பயிர் செய் நிலம் பாலை நிலமாக மாறியிருக்கும். இவ்வாறு சூழலில் ஏற்பட்ட மாற்றங்களும் இந்நாகரிகத்தின் வீழ்ச்சிக்கு அடியிட்டுக்கொடுத்திருக்கலாம்.

அண்மையில் இவ்வீழ்ச்சி பற்றி ஆராய்ந்த 'ரைக்' என்ற அறிஞர் சிந்து நதியின் முகத்துவாரத்தில் ஏற்பட்ட புவியுயர்ச்சியின் காரணமாகக் கடலில் கலக்க வேண்டிய நீர் நிலப்பரப்புக்கு திசைமாற்றப்பட்டதினால் மக்கள் அழிவை எதிர்நோக்க வேண்டி ஏற்பட்டது எனவும் இதனால் சிந்துவெளி மக்கள் தெற்கு நோக்கிப் புலம் பெயர வேண்டியேற்ப்பட்டது என்றும் கூறியள்ளார். இக்கருத்தை 'வீலர்' அவர்களும் அண்மையில் சுழஅடைய வுhயியச அவர்களும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். வேறு சிலரின் கருத்துப்படி காலநிலையில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக பொருளாதாரத்தில் வீழ்ச்சியேற்பட்டது எனவும் இதனால் மக்கள் வறுமையை எதிர் நோக்கினர் எனவும், இது சிந்துவெளி நாகரிகத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது எனவும் கூறினர். ஆனால் அண்மையில் இப்பிராந்தியங்களுக்குரிய தாவரங்களினதும் தாதுக்களினதும் சீதோஷ்ண காலநிலை பற்றி ஆராய்ந்த கலாநிதி 'குப்' அவர்கள் சிந்துவெளிப்பகுதியில் காலநிலை மாற்றம் ஏற்படவில்லை எனக் கூறியுள்ளார். எவ்வாறு காணப்படினும் புவியில் ஏற்பட்ட மாற்றங்களும் சிந்துவெளி வீழ்ச்சிக்கு வழிவகுத்திருக்கலாம்.



பெரும்பாலன நகர உட்பகுதிகள் தீப்பிடித்து கருகிய நிலையில் இருந்ததற்கான சான்றுகளைத் தொல்லியளாளர் எடுத்துக் காட்டினார். வீடுகளின் உடபகுதிகள் யாவும் புகை படிந்த நிலையில் காணப்பட்ட தன்மை அதனை உறுதிப்படுத்துவதாகக் காணப்படுகின்றது. முதன் முதலாக சோவியத் நிபுணர்களே இவ்வாறான கருத்தைச் சிந்துவெளி வீழ்ச்சி தொடர்பாக எடுத்துக்காட்டியமை குறிப்பிடத்தக்கது
.

சிந்துவெளியில் காணப்படும் சில தொல்பொருட் சான்றுகளும் இங்கு போராட்டம் ஒன்று நிகழ்ந்திருக்கலாம் என்பதை எடுத்துக்காட்டுகிறது. குறிப்பா இந்நநாகரிக அறுதிக் கட்டத்தில் கட்டப்பட்ட கட்டிடங்களின் நான்கு கரையும் மூடப்பட்டு அதன் பின்புறத்தில் மாத்திரம் தப்பிச் செல்வதற்கான வழியொன்று கண்டுபிடிக்கப்பட்டது. இத்தகைய ஒரு கட்டிட அமைப்பை பார்க்கின்ற போது அந்நியப் படையெடுப்புக்கான சூழ்நிலை காணப்பட்டது என்பதையும் அதில் இருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்கு இவ்வாறான கட்டிடங்களை அமைத்தனர் என எண்ணத் தோன்றுகிறது. இதே போல் சிந்துவெளிப் பிரதேசத்தின் மேற்றளங்களில் ஆபரணங்கள் புதைக்கப்பட்டிருந்தன என்பதற்கான சான்றுகள் காணப்படுகின்றன. இது அந்நியப் படையெடுப்பால் தமது சொத்துக்களை இழக்க விரும்பாத மக'கள் இவற்றைப் புதைத்து வைத்தனர் எனத் தொல்லியலாய்வாளர்கள் கருதுகின்றனர்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக சிந்துவெளியின் மேற்றளங்களில் காணப்பட்ட பல வகையான எலும்புக் கூடுகள் இப்பகுதியில் படையெடுப்பாளரின் நடமாட்டம் இருந்திருக்கலாம் என்பதனை எடுத்துக்காட்டுகின்றன. இவ்வாறான எலும்புக்கூடுகள் சாதாரணமாக மரணத்தின் போது புதைக்கப்படுவது போன்று அல்லாது ஒழுங்கற்ற முறையில் காணப்படுவதை நேதக்கும் போது இந்த மரணங்கள் திடீர் தாக்குதலினால் ஏறபட்டு இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. கிணற்றுப்படி ஒன்றில் பெண்ணின் எலும்புக்கூடு காணப்பட்டது. இவ் எலும்புக்கூடு ஓடாது பின்தங்கி நின்றோர் சிலர் படையெடுத்து வந்தோர் கையிற் சிக்கி மடிந்திருக்கலாம் என்பதைப் புலப்படுத்தி நிற்கின்றன. சில இடங்களில் மண்டையோடுகளும் எலும்புக் கூடுகளும் கூரிய ஆயுதங்களினால் பிளக்கப்பட்டிருப்பன போல காணப்படுகின்றன. ஒரு சில இடங்களில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த பலர் ஒரே அறையினுள் இறந்து கிடந்ததற்கான சான்றுகள் காணப்படுகின்றன. எனவே சிந்து வெளியின் மேற்றளங்களில் காணப்பட்ட எலும்புக்கூடுகளையும் மேற்சொன்ன தகவல்களையும் நோக்கும் போது சாதாரண  மரணத்தினால் ஏற்பட்ட ஒன்றாக இல்லாது இருப்பதால் இச் சம்பவங்கள் திடீரென நடைபெற்று சிந்துவெளி நாகரின வீழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கலாம்.

இவற்றை விட தலைமையான மையங்களிலிருந்து தொலைவில் இருந்த பிரதேசங்களிலும், உதாரணமாக கத்தியவார் தீபகற்பகத்தில் வீழ்ச்சியின் சுவடுகளைக் காண முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது. லோத்தாலில் வீழ்ச்சியின் முதற்படிகள் கி.மு.19ம் நூற்றாண்டிலேயே தென்படுகின்றன. அந்தக்காலத்தில் கடுமையான உள்ளுர் நெருக்கடிகளுக்கு ஆளாகி இருந்த சிந்துவெளி மையங்களுடன் இந்தத் துறைமுகத்தின் தொடர்புகள் கி.மு.18ம் - 17ம் நூற்றாண்டிலேயே சிதைந்து கொண்டிருந்தன. எனவே துறைமுக நகரங்களின் வீழ்ச்சியும் வர்த்தக நிலைகளில் ஏற்பட்ட வீழ்ச்சிகளும் சிந்துவெளி வீழ்ச்சிக்கு காரணமாக அமைகின்றன.  

அம்ரி, சன்குந்தாரா, ஹரப்பா போன்ற இடங்களில் சிந்துவெளிக்கு அப்பால் உள்ள பிரதேசங்களுடன் ஒப்பிடும் போது சில வகையான ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பிக்கான், கொந்தாளி, துளையிடப்பட்ட கோடாரி என்பன குறிப்பிடத்தக்கன. இவ்வாறான ஆயுதங்கள் சிந்துவெளிக்கு அப்பால் ஈரான், ஈராக் போன்ற இடங்களிலும் கண்டுபிடிக்கப்பட்டுளளன. எனவே சிந்துவெளியின் இறுதிக்கட்டத்தில் புதியதொரு கலாசாரம் அந்நியர் வருகையினால் தோற்றம் பெறச் சிந்து வெளிக் கலாசாரம் வீழ்ச்சி நிலையை  எய்திருக்கலாம்.

இதே போல சிந்துவெளியின் இறுதிக்கட்டத்தில் இதுவரை பயன்படுத்தப்படாத புதிய சவஅ டக்க முறையொன்று பின்பற்றப்பட்டது என்பதற்குச் சான்றுகள் காணப்படுகின்றன. குறிப்பாக தென் பலூஸ்சிஸ்தானப் பகுதிக்குள் 'சாயுதம்' என்ற இடத்தில் அந்நியருக்குச் சொந்தமான சவஅ டக்க முறைகள் காணப்பட்டதற்குச் சான்றுகள் காணப்படுகின்றன. மேலும் இவ் அடக்க முறைகள் ஒழுங்கற்ற தன்மையுடையவனாகவும் காணப்பட்டன. இதனை நோக்கும் போது இன்னாரு நாகரிகத்தின் தோற்றம் இந்நாகரிகத்தின் வீழ்ச்சிக்கு வழியிட்டுக்கொடுத்தன எனலாம்.

மேலே கூறப்பட்ட நீண்ட காலக் காரணிகளுடன் புதிதாக இந்தியாவிற்குள் புகுந்த ஆரியர்களின் வருகையினால் நாகரிகம் வீழ்ச்சியை எய்தலாயிற்று. வருகை தந்த புதிய இனத்தவர்கள் கையாண்ட மொழியியல் மூலமாக இதனை நிரூபித்துள்ளனர். சில வரலாற்று அறிஞர் குறிப்பாக இந்தோ ஐரோப்பிய மொழி பேசிய ஆரியரின் குடும்பத்தினர் பபிலோனியா நாகரிகத்தில் இருந்திருக்கலாம் என்பதற்கு (கி.மு.1600) 'மித்தானி வம்சம்' சூடிக்கொண்ட பல பெயர்கள் எடுத்துக்காட்டப்படுகிறது. இதே வேளை இருக்கு வேதத்தில் கூட வட இந்தியாவில் ஆரியர் நுழைந்த பற்றியும் அப்புதிய மக்கள் கூட்டத்தினரைப்பற்றியும் நேரடியாகவும், மறைமுகமாகவும் குறிப்புக்கள் காணப்படுகின்றன. உதாரணமாக கரியூப என்ற இடத்தில் இரு மக்கள் கூட்டத்தினரிடையே போர்கள் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது. இந்த கரியூப் என்ற இடமே 'ஹரப்பா' என வரலாற்று ஆய்வாளர்களால் கருதப்படுகிறது. ஆகவே நீண்ட காலமாக வீழ்ச்சி நிலையை அடைந்து கெண்டிருந்த சிந்துவெளி நாகரிகம் ஆரியர் வருகையுடன் வீழ்ச்சியை முற்று முழுதாக அடையலாயிற்று. சிந்துவெளி நாகரிக வீழ்ச்சியைப் பற்றி இற்றை வரை எல்லோராலும் ஏற்றத்தக்க வகையில் முழுமையான கருத்துக்கள் முன்வைக்கப்படவில்லை யாயினும் மேற்கூறப்பட்ட காரணிகளை தொகுத்து நோக்கும் போது படிப்படியாக வீழ்ச்சி நிலையை எய்திக் கொண்டிருந்த சிந்துவெளி நாகரிகம் இப் புதிய இனத்தின் வருகையினால் அதன் மேன்மை நிலையை இழந்து வீழ்ச்சி நிலையை எய்த வழிவகுத்தது என்று கூறலாம். தோற்றம் பெறும் நாகரிகங்கள் வீழ்ச்சியை அடைவது வரலாற்று நியதியாகும். அந்த வகையில் சிந்துவெளி நாகரிகமும் வீழ்ச்சியை எய்தியது எனலாம்.




உசாத்துணை நூல்கள்


1. பசாம் யு.டு  1956 வியத்தகு இந்தியா பக்.163-165.

2. சேர். மோட்டிமர் வீலர் 1969 முன்னை இந்தியாவும் பாகிஸ்தானும்  பக்.78-81.

3. தங்கவேலு.கோ. 1976  இந்திய வரலாறு பழனியப்பா பிரதர்ஸ் பக்.32-36.

4.  ராய்சௌதுரி 1965 இந்தியாவின் சிறப்பு வரலாறு பக்.49-

1 comment:

  1. இதன் அறிவியல் பங்களிப்புகள் உள்ளனவா

    ReplyDelete

  கிழக்கிலங்கையின் தொன்மையை பறைசாற்றும்                         திருமங்கலாய் -சிவனாலம். கள ஆய்வுத்தொகுப்பு   கிழக்கிலங்கையில் திருகோணம...